ஒரே நேரத்தில் இரண்டு உலக சாதனை நிகழ்வு...
தி பிரிட்ஜ் அறக்கட்டளையின் 12 வது மற்றும் 13வது உலக சாதனை முயற்சி!
உலக தோண்டு தினம் மற்றும் தேசிய ஆசிரியர்கள் தினமான இன்று நம் அன்றாட வாழ்வில் தேவையான உணவு, உடை, இடம் சார்ந்த பொருள்களின் மூலம் "வேர்ல்டு சாரிட்டி டே" என்ற வாசகத்தில் நம் நாட்டின் வறுமையை ஒழிக்க வலியுறுத்தியும் மற்றும் Dr. ராதா கிருஷ்ணன் அவர்களின் உருவம் பொறித்த 150 A4 படங்கள் மூலம் "ஹேப்பி டீச்சர்ஸ் டே" என்ற வாசகத்துடன் வெங்கடேஸ்வரா மேல்நிலை பள்ளி, வேலூரில் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தோம். சுமார் 2 மணி நேரம் இருபது நிமிடத்தில் 7 தன்னார்வலர்கள் மூலம் இந்த சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வு ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் திரு டிராகன் ஜெட்லி காணொளி காட்சி மூலம் உறுதி செய்து மாபெரும் இரட்டை உலக சாதனையாக அறிவித்தார். அதற்கான சான்று மற்றும் கெடியம் இரண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் கரங்களால், தி பிரிட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் திரு.மதிவாணன் அவர்கள் பெற்று கொண்டார். தன்னார்வலர்கள் அனைவருக்கும் நிகழ்வு இறுதியில் மெடல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இறுதியில் 100 தின கூலி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் இலவசமாக கொடுத்து உதவி செய்தோம்.
இப்படிக்கு,
தி பிரிட்ஜ் அறக்கட்டளை வேலூர்.
Comments
Post a Comment