இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணையை, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு, அக்டோபர் 14-ஆம் தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தமிழக மாணவர்களுக்கு வழக்கமான நேரடி முறையில் தேர்வு நடைபெறும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், கோரிக்கை விடுத்தால் அவர்கள் ஆன்லைன் வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment