முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க செயலாளர் மற்றும் பொருளாருக்கு  மாவட்டஆட்சித்தலைவர் அ.சண்முகசுந்தரம் பாராட்டு.


தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்டகிளை சார்பில் கரோனா நோய் தடுப்பணிகளை சிறப்பாக செயலாற்றியதற்காக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து  நினைவுப் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சண்முகசுந்தரம், இஆப  அவர்கள் பாராட்டினார்.
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு வரவேற்று பேசினார்.  நிகழ்வுகளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தொகுத்து பேசினார்.  
வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எம்.ஆண்டாள், பொருளாளர் குமரன்.ஆர்.சீனிவாசன் வேலூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு மைய கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரி,  மண்டல நன்னடத்தை அலுவலர் ஹஜாகாமாலுதீன்,  செயற்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.நரசிம்மன்,  திருமாமறன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.



கரோனா நோய் தடுப்பணிகளை ரெட்கிராஸ் சங்கத்துடனம் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றியதற்காக செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து  நினைவுப் பரிசு வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.அ.சண்முகசுந்தரம், இஆப  அவர்கள் பாராட்டினார் அப்போது அவர் கூறியதாவது.. இச்சங்கத்தின் செயலாளர் ஜனார்த்தனன்  கரோனா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டார்.  மேலும் வட மாநில பயணிகள் ரயிலில் அனுப்புவதற்காகவும் காட்பாடி ரயில் நிலையத்தில் இணைந்து செயலாற்றினார் மேலும் சமூக பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றியதற்காக எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறன் மற்றும் பொருளாளர் ஆர்.சினிவாசனையும் பாராட்டுகிறேன் என்றார்.


(செ.நா.ஜனார்த்தனன்  செயலாளர் )


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.