வறுமையில் தவித்து வந்துள்ள திருமதி நிர்மலா அவர்களுக்கு தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவியுள்ளார் தினேஷ் சரவணன்.
வேலூர் மாநகரம் பாப்பாத்தியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் திருமதி நிர்மலா தனது கணவருடன் வறுமையில் தவித்து வந்தார். தனது ஒரே மகளும் திருமணத்திற்கு பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக தள்ளுவண்டியில் இளநீர் கடை வைக்க உதவி செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 100 இளநீர் கொண்டு தனது தொழிலை தொடங்கியுள்ள இவருக்கு உங்கள் வாழ்த்தும் ஆதரவும் வேண்டும்.
கடை வைத்த 10 வது நிமிடத்தில் ஒருவர் 100 ரூபாய்க்கு இளநீர் வாங்கி சென்றார்.
Comments
Post a Comment