வகுப்பறை பயணத்தில் -பெ.தமிழ்ச்செல்வி.
ஆசிரியர்கள்
வகுப்பறை பயணத்தில்
பாட நேரக் கழனியில்
பகலெல்லாம் பாடுபடும்
விவசாயி!
பச்சைமண் சிறுவனை
பக்குவமாய் வனைகின்ற
தொழிலாளி!
வழி மாறிச் செல்பவனை
வழிகாட்டி அழைத்துப் போகும் அன்பின் தோணி!
சிகரத்தில் ஏற்றி விட்டு
இறுமாந்து பூரிக்கும்
தன்னலமற்ற மனித ஏணி!
நீதி/நேர்மை/ஒழுக்கம்
இணுக்கு விடாமல் எடுத்து,
மாணவனை நெய்யும்
நெசவாளி!
காலத்தால் பாதிக்காத
கல்வி தந்தே
ஞாலத்தை வழி நடத்தும்
மெய்ஞ்ஞானி!
கற்பித்தலில் வேற்றுமை
காட்டாமல் /மாற்றுருவாய்
ஜகம் கண்ட கலைவாணி!
சாதனைகள் பல புரிய
இதயத்தை நெறிப்படுத்தும்
அறிவுக்கேணி!
அரிச்சுவடி/வாய்ப்பாடு
கற்றுத் தந்தவர்
அன்றாடம் நாம் வணங்கும்
தெய்வமே!
அறிவுரைகள் பின்பற்றி
நாம் செல்ல
அவனியில் நம் வாழ்வு
உயர்ந்திடுமே!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன்,
வாலாஜாப்பேட்டை.
Comments
Post a Comment