தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம்...
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக 5068 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய
சட்டமன்ற உறுப்பினரிடம் மனு
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக முதலமைச்சருக்கு முறையீட்டு மனு அனுப்பப்ப தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் அதன் அடிப்படையில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் எ.பி.நந்தகுமார் அவர்களிடம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளரும் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ஜி.டி.பாபு ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.. தமிழகத்தில் ஜனவரி 2019 -ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தொடர்பாக 5068 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணி என்.நமச்சிவாயம் உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மீதான 17பி நடவடிக்கைகளை இரத்து செய்து பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும், ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு தலைவர்கள் பி.பேட்ரிக்ரெய்மண்ட், மா.ரவிச்சந்திரன் மீதான 17பி நடவடிக்கைகளை இரத்து செய்ய வேண்டும் முதலமைச்சர் நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமுகமான நிலை உருவாக்க வேண்டும்.
கரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அற்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை களை இரத்து செய்து சுமுகமான சூழ்நிலையை நிலைநிறுத்தி மக்கள் பணியாற்றிட சுமூக சூழ்நிலை ஏற்படுத்தி தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள், 1,22,462 மாணவர்களும், 1,49,678 மாணவிகள் என மொத்தம் 2,72,140 மாணவ மாணவிகள் கல்வி பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 11,344 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே மாணவர் ஆசிரியர் பொதுமக்கள் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டத்திலும் குடியாத்தம் நகரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்ட அமைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கனிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்ற மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டது.
செ.நா.ஜனார்த்தனன், Phone: 9443345667 ஜாக்டோ-ஜியோ, மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்,
Comments
Post a Comment