முன்னாள் மாணவர்களால் ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம் ஆகியோருக்கு பாராட்டு.



முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில் நம் காட்பாடி தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களால் தொழிற்கல்வி ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம், தலைமையாசிரியர் நரேந்திரகுமார், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட உதவி அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு காட்பாடி துர்கா மகாலில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் நடைபெற்றது.  துர்கா மகால் உரிமையாளர் மற்றும் முன்னாள் மாணவர் ஆர்.சுரேஷ் வரவேற்று பேசினார்.
மாணவர்களுக்கு வண்ண உடை, குறிப்பேடுகள் வழங்கல்
காட்பாடி பகுதியை சார்ந்த 25 மாணவர்களுக்கு வண்ண உடை, மற்றும் குறிப்பேடுகள் ஆகியவற்றை தொழிற்கல்வி ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம், தலைமையாசிரியர் நரேந்திரகுமார், வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்ட உதவி அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோர் வழங்கினர்.



பாராட்டு காட்பாடி தன்னார்வ தொண்டர்கள் குழுவின் சார்பில் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களால் தொழிற்கல்வி ஆசிரியர்கள் செ.நா.ஜனார்த்தனன், எஸ்.சச்சிதானந்தம், தலைமையாசிரியர் நரேந்திரகுமார், ஒருங்கிணைந்த கல்வி திட்ட உதவி அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வினை முன்னாள் மாணவர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆர்.சுரேஷ், ராஜ்கமல், மோகன், ராகேஷ், டில்லிராமன், யுவராஜ், கிரிராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


செ.நா.ஜனார்த்தனன், மாநில பொதுச்செயலாளர்  9443345667


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.