திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட காவல் துறையினர்...

திருநெல்வேலி மாவட்டம் :09.09.2020



இன்று (09.09.2020) திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும்,சமூக இடைவெளியை கடை பிடிக்கும் விதமாகவும்,  கிருஷ்ணாபுரம் முத்து மஹாலில் வைத்து நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜு அவர்கள் உடனிருந்தார்.


 கடந்த மாதம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர் உட்பட 43 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் வெகுமதி வழங்கியும் நற்சான்றிதழ் வழங்கியும்  பாராட்டினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.