காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் படம் திறப்பு...


  இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டகிளையின் அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் மறைவினை அடுத்து அவரது திருஉருவ படத்தினை காட்பாடி ரெட்கிராஸ் அலுவலகத்தின் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு துணைத்தலைவர் மத்திய அரசு வழக்கறிஞர் வி.பாரிவள்ளல் தலைமை தாங்கினார்.  செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். 
மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் துணைத்தலைவருமான டி.எம்.விஜயராகவலு அவர்கள் மறைந்த அவைத்தலைவர் டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் திருஉருவ படத்தினை திறந்து வைத்து பேசினார்.
துணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அவரின் மகன் மற்றும் கல்வி உலகம் நிதிஉதவி உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, காட்பாடி ரெட்கிராஸ் பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எ.ஶ்ரீதரன், எம்.பிரபு, டாக்டர்.வீ.தீனபந்து, எம்.ரமேஷ்குமார் ஜெயின், ஜி.செல்வம், வாழ்நாள் உறுப்பினர்கள் வி.காந்திலால்படேல், எ.ஆனந்தகுமார்  தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்.மோதகபிரியன் உள்ளிட்ட பலர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
டி.வி.சிவசுப்பிரமணியன் அவர்கள் 22.06.1943ஆம் ஆண்டு பிறந்து ஊரிசு கல்லூரியில் பட்டம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பணியேற்று, தலைமையாசிரியராக, மாவட்டக்கல்வி அலுவலராக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றி பணி நிறைவு பெற்றவர் 77 வயதாகும் அவர் வேலூர் தமிழியக்கம், ரெட்கிராஸ், அறிவியல் இயக்கம், எழுத்தாளர், கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் நிர்வாகியாக பணியாற்றியவர் அவரது மறைவு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.
(செ.நா.ஜனார்த்தனன், செயலாளர் 9443345667)
படவிளக்கம்.  இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி வட்டகிளையின் அவைத்தலைவராக இருந்த மறைந்த டி.வி.சிவசுப்பிரமணியம் அவர்களின் திருவுருவபடத்தினை மூத்த வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு திறந்து வைத்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்தப்படம் உடன் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவர் வி.பாரிவள்ளல், அவைதுணைத்தலைவர்கள் ஆர்.சீனிவாசன், ஆர்.விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி ஆகியோர்


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.