குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா...
பெண்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும்! ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஊட்டச்சத்து குறித்த ஆட்டோ பிரச்சாரத்தை துவக்கி வைத்து ஊட்டசத்து பெட்டகங்களை வழங்கியும், ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி அரங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.வி.வளர்மதி மற்றும் காட்பாடி ரோட்டரி சங்கம் தலைவர் ஆர். வினாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்றைய வளரிளம் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் தாய்மார்கள், ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் நலனை பொறுத்தே அமைகிறது என ஊட்டச்சத்து மாத விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க செப்டம்பர் மாதம் முழுவதும் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2020 மாவட்டம் முழுவதும் அனைத்து உள்ள ஒன்றிய பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
அதன் நோக்கம் இன்றைய வளரிளம் பெண்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்கும் தாய்மார்கள், ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் நலனை பொறுத்தே அமைகிறது என விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூறினார்.
நிரைமாத கர்பிணி தாய்மார்கள், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்ற சிறு தானிய உணவுகளை உண்ண வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சி மக்களின் நலனை பொறுத்தே அமைகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் முக்கியமாக கருதப்படுகிறது.
பெண்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்த பின்னரே திருமணம் செய்ய வேண்டும். குறிப்பாக நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்யக் கூடாது. நெருங்கிய உறவினர்களுக்கு திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மன வளர்ச்சி குன்றியும், குறைபாடுகளுடன் பிறக்கிறது. இதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குழந்தை பிறந்து 6 மாதம் வரை தவறாமல் தாய்பால் வழங்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 82 சதவீதம் தாய்பால் வழங்கும் தாய்மார்கள் உள்ளார்கள் என்பது மகிழ்சியான விஷயம்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 1006 அங்கன் வாடி மையங்களிலும் கொய்யா, சீத்தாபழம், சப்போட்டா பழம் நெல்லி செடி, எலுமிச்சை, நாவல் செடி, பப்பாளி, முருங்கை போன்ற விட்டமின் நிறைந்த வெடிகளை நடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
பொதுமக்கள் அங்கன்வாடி மையங்களை சுற்றியுள்ள இடத்தில் செடிகளை நட்டு பராமரிக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்.
விட்டமின் பற்றாக்குறை உள்ள குழந்தைகளுக்கு சூரிய ஒளி சக்தி மூலம் விட்டமின் டி கிடைக்க 12 மணி முதல் 2 மணி வரை உள்ள இடைப்பட்ட நேரத்தில் வெயிலில் நிற்க வைக்கவும். குழந்தைகளுக்கு எள் உருண்டை, நாட்டு வெள்ளம், பச்சை காய்கறிகள் அதிகம் சத்துள்ள உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகள் 7 ஆண்டு வரை வளரும் வளர்ச்சியே அவர்களை ஆயுட்காலம் வரை ஆரோக்கியமாக வளர வழி வகை செய்யும் என தெரிவித்தார்.
50 எடை குறைந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
தொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ரகு, வட்டார மருத்துவ அலுவலர் திரு.ந.சங்கர்கணேஷ், உதவி ஆணையர் திரு.பி.செந்தில்குமார் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி.மு.சாந்திபிரியதர்ஷினி நன்றி கூறினார்.
Comments
Post a Comment