என் கருத்து விதைகள் எங்குமே சுதந்திரம் காணும் -பெ.தமிழ்ச்செல்வி.

என் அம்மா



என் ஐந்தரை அடி உயரத்திற்கு
பக்குவமென்ற பதம் தந்தவள்!
வாழ்க்கையின் அத்தனை 
நெளிவு சுளிவுகளையும் 
அறிய வைத்த குருவானவள்!
சிறு வயதில் என்னுடைய
மல ஜலம்/சளி/வாந்தி அகற்றியதில்
முகம் சுளிக்காத தாதியானவள்!


அவளின் மொத்த அன்பினையும்
அணு அணுவாய் ரசிக்க மடி தந்தவள்!
நகம் கடித்து/முகம் தடவி/முடி கோதி/
என்னை அள்ளியும் ஸ்பரிசித்து 
அவளை ரசிக்க நளினமாக்கியவள்!
பதவிகள் தகுதியாக /படிப்பு தந்து/
மகுடம் சூட /என்னை அழகுபடுத்தியவள்!


என் எழுதுகோல் பல துறைகளில்
உழுதுகோலாக தன்னம்பிக்கை
உரம் தந்து மெருகேற்றியவள்!
பருவத்தே சபலங்களில் சிக்கி
சறுக்கிடாமலிருக்க /சாதுர்யமாக
வழிகாட்டி /மிடுக்குடன்
வாழ்வில் வளைய விட்டவள்!


என் கருத்து விதைகள் எங்குமே
சுதந்திரம் காணும் கழனியானவள்!
என் மீதான அஸ்திரங்களை கிழித்தே/
ஜகத்து வஸ்திரமாக யோசித்தே/
நேர்த்தியாக்கிய தையலவள்!
என் மிடுக்கான தலைமைப்பண்பு
வளம்  வரும் நாற்றங்காலானவள்!


என்னை பிறந்த வீட்டு ராணியாக/
புகுந்த வீட்டு தேனியாக 
புடம் போட்டவள்!
என் சிந்தனையின் முன்னேற்ற
மணிகளின் அறுவடையில்
முதல் ரசிகையானவள்!
அலையென துன்பம் அடிக்கையில்
தாங்கிடும் கோவர்த்தனகிரியானவள்!
என் நாக்குத்திடல் /வேலிப்பற்கள்
தள்ளி/நயமாய் நவில குருவானவள்!


போலி அன்பு/பொறாமை/வக்கிர
எண்ணம் என்னுள் வளர விடாதவள்!
பொத்திப் பொத்தி வளர்த்த
என் அம்மாவின் தன்னலமற்ற
தியாகங்கள் யாவும் யாகங்களே!
என்னைப் போல் ...
அம்மா இல்லாமல்...
இறப்பினால் இழந்த 
அம்மாக்களுக்கு அஞ்சலிகளையும்,
ஆண்டவன் அருளால் இருக்கும்
அம்மாக்களுக்கு ஆத்மார்த்தமான
அன்பினையும் சமர்ப்பிக்கும்.....



அம்மா பைத்தியம்
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.