கேடிஎம் 750 ட்யூக் தயாரிப்பு பணியில் வரிசைக்கட்டி நிற்கும் பைக்குகள்...
கேடிஎம் 750 ட்யூக், அட்வென்ஜெர் & சூப்பர்மோட்டோ... தயாரிப்பு பணியில் வரிசைக்கட்டி நிற்கும் பைக்குகள்
கேடிஎம் முதலீட்டாளர் கண்காட்சியில் புதியதாக 750சிசி ரேஞ்சில் ட்யூக் மற்றும் அட்வென்ஜெர் உள்பட சூப்பர்மோட்டோ ரக பைக்குகளை பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.
ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் 750 ட்யூக், 750 அட்வென்ஜெர் மற்றும் 750 சூப்பர்மோட்டோ உள்ளிட்டவற்றை அடக்கிய 750சிசி மோட்டார்சைக்கிள் பிரிவை புதியதாக உருவாக்கி வருகிறது.
கேடிஎம்-ன் தாய் நிறுவனமான பைரர் மொபைலிட்டி க்ரூப்பின் முதலீட்டாளர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த 750சிசி வரிசை பைக்குகள் அனைத்தும் சீன ஆட்டோமொபைல் நிறுவனமான சிஎஃப்மோட்டோ உடனான கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கேடிஎம் பிராண்ட் சிஎஃப்மோட்டோ உடன் 2017ல் இருந்து கூட்டணி வைத்து வருகிறது. இவை இரண்டும் இணைந்து சீனாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதிலும் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் இந்திய சந்தையை பொறுத்தவரையில் பஜாஜ் ஆட்டோ தான் கேடிஎம்-விற்கு கூட்டணி நிறுவனமாகும். இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்துடனான பஜாஜின் பங்கு 48 சதவீதமாகும். ஆனால் சீனாவில் சிஎஃப்மோட்டோவின் பங்கு 51 சதவீதமாக உள்ளது. இதனால் மீதி 49 சதவீதத்தை மட்டுமே கேடிஎம் சொந்தமாக கொண்டுள்ளது.
சீனா, ஹாங்க்சோ நகரத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய பைக்குகளில் சிஎஃப்மோட்டோ நிறுவனத்தால் 750சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. அதேநேரம் சப்-500சிசி என்ஜின்களுக்காக கேடிஎம் பிராண்ட் இந்தியாவின் பஜாஜை தான் நம்பியுள்ளது.
ஏனெனில் பஜாஜின் சாகான் தொழிற்சாலையில் தான் இந்த 500சிசி என்ஜின்கள் தயாரிக்கப்படவுள்ளன. சிஎஃப்மோட்டோ மற்றும் கேடிஎம் கூட்டணியில் முதல் தயாரிப்பு சிஎஃப்மோட்டோ எம்டி800 என்ற பெயரில் சிஎஃப்மோட்டோ பிராண்டில் தான் வெளிவரவுள்ளது.
அட்வென்ஜெர் ரக பைக்கான இதில், கேடிஎம் 790 அட்வென்ஜெரின் என்ஜின் அமைப்பு அப்படியே வழங்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் நிறைவு செய்த நிலையில் சீனாவில் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த பைக் மாடல் அடுத்த அக்டோபர் மாதத்தில் அங்கு அறிமுகமாகவுள்ளது.
புதிய 750சிசி இரட்டை-சிலிண்டர் என்ஜினை பற்றியும், கேடிஎம் 750சிசி மோட்டார்சைக்கிள்களின் தோற்றத்தை பற்றியும் எந்த தகவலும் தற்போதைக்கு வெளியாகவில்லை. இவை அனைத்தையும் வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
Comments
Post a Comment