04.10.2020-ம் தேதி காலை - பிற்பகல் யு.பி.எஸ்.சி.தேர்வு...
04.10.2020 அன்று நடைபெற உள்ள யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் 04.10.2020 ஆண்டு நடைபெற உள்ள யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட வருவாய் அலுவலர் முக்கியத் துறை அலுவலர்கள் 9 தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள் துணை ஆட்சியர் வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர் மேற்படி தேர்வு காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2.30 முதல் 4.30 வரை நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வு வேலூர் மாவட்டத்தில் 9 மையங்களில் நடைபெறுகிறது மொத்தம் 24 36 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
செய்தி வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலூர்.
Comments
Post a Comment