வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா...
வேலூரில் அமையப்பெற்ற தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சார்ந்த வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற திறப்பு விழா மற்றும் ஆற்காடு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா ஆகிய இரண்டு விழாக்களும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ஏ.பி.சாஹி அவர்கள் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. தலைமை நீதியரசர் அமரேஷ்வர் பிரதாப் சாஹி தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். அவ்வுரையில் கோவிட்-19 தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் கீழமை நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நீதியரசர் எம் சத்தியநாராயணன் வேலூர் மாவட்ட நீதிபதி நீதியரசர் எஸ்எம் சுப்பிரமணியம் வேலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதி மாண்புமிகு நீதிபதி ஜெயச்சந்திரன் மற்றும் நீதியரசர் எம் டி இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இவ் விழாவில் செல்வசுந்தரி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வேலூர் மாவட்டம் அவர்கள் வரவேற்புர...