பிரயாணம் எனும் சொல்லுக்கு செலவு எனும் பொருள் தந்தவர் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

வாழ்வின் இலக்கணமான திரு.வி.க!

திரு.வி.கல்யாணசுந்தரனார்....
பழமையின் பிரதிநிதி....ஆனாலும்
புதுமையின் சங்கநாதம்!


கொச்சை சொல்/வசைக் குறிப்பற்ற
தீஞ்சுவைப் பேச்சாளர்!
மேடைப்பேச்சுக் கலையின் வித்தகர்!


தேசபக்தன்/நவசக்தி
 இதழ்களின் நாயகனாகி...
50 நூல்கள் படைத்த எழுத்துச்சிற்பி!
தமிழ்மொழி வளர்ச்சிக்கு வித்தானவர்!


படித்த அறிவாளி/ஏடறியாத்
தொழிலாளர்களை கவர்ந்த 
செழுந்தமிழ்ப் பாவலர்!


இலக்கியம்/இலக்கணம்/அரசியல்/
சமயம்/சமரசம்....அனைத்தும்
அடங்கிய மூன்றெழுத்தானவர்!


தொட்டவற்றை பொன்னாக்கும்
எழுத்தாளராக கோல்ட்ஸ்மித்தால்
புகழ்மகுடம் கண்டவர்!


மனைவி ஆறாண்டில் மரணம் காண
மறுமணம் நாடாத உறுதியோடு....
பெண்ணின் பெருமை மதித்தவர்!


சாந்தத்தின் வடிவமாகி,
நல்லன கொண்டு தீயன விலக்கும்
நோக்கம் தரித்தவர்!


பிரயாணம் எனும் சொல்லுக்கு
செலவு எனும் பொருள் தந்தவர்!


திராவிடரும் காங்கிரசும்...அரசியல்
கன்னிப் பேச்சுக்கு தலைப்பாக்கியவர்!
தன் பெயர் முதல் ஈரெழுத்தை
கல்கியின் பெயரில் தானமானவர்!


தமிழனாகப் பிறந்து 
இந்தியனாக வாழ்ந்த
திரு.வி.க.வின் புகழ்
தரணியிருக்கும் வரை 
தளர்வு காணாமல் உலவிடும்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.