சமூக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் என தீயணைப்பு வீரர்களின் பயிற்சி முகாமில் டி.ஐ.ஜி. சைலேந்திர பாபு பேச்சு.
தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில் ஆண்டுதோறும் தேர்வாகும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது இம்முகாமில் வேலூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தேர்வான 58 பயனாளிகளுக்கு பயிற்சியை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது அடுத்த மாதம் வரை இந்த பயிற்சி நடைபெறும் இப்பயிற்சியை தீயணைப்புத்துறை டி.ஜி.பி.சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார் பயிற்சி பெரும் தீயணைப்பு வீரர்களிடம் களப்பணியில் செய்ய வேண்டிய பணிகள் சமூக மனித நேயத்துடன் நடந்து கொள்ளுதல் கடமையை சரியாக செய்தால் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தினார் தொடர்ந்து பயிற்சி பெறும் புதிய பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார் வடக்கு மண்டல துணை இயக்குனர் சத்ய நாராயணன் மற்றும் தீயணைப்பு மாவட்ட அலுவலர் லஷ்மி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment