தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில் புரிதலும்/சமாதானமும் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
இப்படி இருந்தால் எப்படி!?
காலத்தோடு கண்விழித்து
பள்ளி/கல்லூரி சென்று
பாடம் படித்து
திறமை வெளிக்காட்டுவது
கண்ணாமூச்சியாக மாறி
காணொளி கல்வியாகி...
காலங்கள் இப்படியிருந்தால்
மேற்படிப்பு நீட் தேர்வுகள் எப்படியோ?
நாட்டிலேயே 26 வது இடத்தில்
குஜராத்தின் கல்வி நிலையிருக்க/
புதிய இந்தியா கனவு நிலை
எப்படியென இப்படி ஒரு
கேள்வி கேட்கிறார் ராகுல்காந்தி!
தாமரைப்பூ போன்ற இல்லறவாழ்வில்
புரிதலும்/சமாதானமும் மறைந்து
ஊடல்களும்/கூடல்களும்
இல்லாத நிலை வந்திடவே
வசந்தமாகும் வாழ்விற்கு
வழி எப்படி வரவேற்பாகும்?
விமான ஓடுபாதை முடிந்து
கட்டுக்குள் விமானம் வரும்
புல்பாதை பரப்பின் நியதி
கோழிக்கோட்டில்
காலாவதியாக /19 பேரின் உயிர்ப்பலி
இப்படித்தானே அமைந்திடும்!
கன்னத்தில் அறைந்து சொல்லும்
கொரானா பாடம் மறந்து
இருசக்கரவாகனத்தில்
மாஸ்க் இன்றி மூவர் போக
எப்படி மரணம்
வாசல் அழைப்புமணியை
அடிக்காமல் போகும்?
அரசாங்கம் தந்த வீடுநிரப்பு போராட்டம்/
வாழ்வாதாரம் 4 மாதங்களாக
கேள்விக்குறி நிலைமையாக/
வயிற்றுக்குச் சோறிடல் எப்படியென
ஆதங்கமான கோபம் இப்படியாகுமா?
எதற்கும்/எவருக்கும் அஞ்சோமென
நெஞ்சு நிமிர்த்தி நின்ற
உலகு சமுதாயத்தை 4 சுவற்றுக்குள்
தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்
கொரானாவே..உன்னால் தானே இப்படி?
கருப்பு சொக்கா/பச்சை டவுசரு
சிறுவன் பேரு பழனி/பெத்தவங்க வாங்க,
காவல்துறை அறிவிப்பு!
ஆடி கூழ்/அம்மன் தேர்/வாண வேடிக்கை/
வண்ண விளக்கு/பாட்டு கச்சேரி
இப்படி திருவிழாவின்
இத்தனை நிகழ்வும்
தேதி கிழித்தெறிந்த
நாட்காட்டி தாளாய் போக
இனி வரும் காலம் எப்படி?
உற்றார் சாவு/உறவினர் திருமணம்
ரயில் பயணம்/பஸ்ஸுக்கு காத்திருப்பு
எதுவும் இல்லாத நிலையினிலே
குடைக்குள் உள்ள சூழ்நிலைக்
கைதிகளாக...இப்படி இருந்தால் எப்படி?
இருட்டிலிருந்து கொண்டு
விளைவுகள் பற்றி சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க முயற்சிப்பதாக
இப்படி இருந்தால் எப்படி
ஆச்சரியக்குறியில் அமையட்டுமே!
இருக்கும் நிலைமையில்
இது தேவையா என
இழந்த பல சந்தோஷங்களை
நினைத்துக் கேட்கும்
கேள்விக்குறியாக
இப்படி இருந்தால் எப்படி இருக்கட்டுமே!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728.
Comments
Post a Comment