ஓடுதலும்/குதித்தலும் ......நதிகளின் விடுதலை - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

விடுதலை

யாருக்கும் அடிபணியாமல்
கவிழ்தலும்/விடிதலும்
.....வானத்தின் விடுதலை!
யாரையும் உள்ளங்கையில்
தாங்குவதும்/அதிர்வதும்
.....நிலத்தின் விடுதலை!
அலைகளால் கரையை நித்தமும்
தொடுவதும்/விலகுவதும்
.....கடலின் விடுதலை!
யார் வந்தாலும் நிழல் தந்து
பூப்பதும்/காய்ப்பதும்
.......தாவரங்களின் விடுதலை!
அருகம்புல்லில் அழகாக
துயில்வதும்/கதிரவன் வர மறைவதும்
......பனித்துளிகளின் விடுதலை!


ஓடுதலும்/குதித்தலும்
......நதிகளின் விடுதலை!
அடங்குதலும்/உயர்தலும்
.......குளம்/ஏரிகளின் விடுதலை!
குவிதலும்/விரிதலும்
.......பூவிதழ்களின் விடுதலை!
கொல்லுதலும்/கொல்லப்படுதலும்
.......மிருகங்களின் விடுதலை!


சுயமாக சிந்தித்தலும்
சிந்தித்ததை அச்சமின்றி
வார்த்தைகளால் செயல்படுத்தலும்
மனிதனுக்கான விடுதலை!
ஆனால்.....
சுயமாக சிந்திக்காத வரை
மனிதா....!
உனக்கும்/விடுதலைக்கும்
இடைவெளி அதிகமே!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.