ராணிப்பேட்டையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம்...
ராணிப்பேட்டை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்
அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகரில்மும்பை–சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,அங்கு ரூ.10 கோடி மதிப்பில் பொது தனியார் கூட்டாண்மை திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க முதல் கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் உள்ளதாகவும், அதற்கான திட்ட வரைவு அறிக்கை அரசுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிர்வாகவசதிக்காக வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தற்காலிக அலுவலகம்
மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்திலும், எஸ்பி அலுவலகம் நக
ராட்சிஅலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகிறது.
இதனையடுத்து ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய் தடுப்பு மருந்துஉற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.118.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ராணிப்பேட்டை பாரதி நகர் பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு கால்நடை நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் புதியஆட்சியர் அலுவலகம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment