சுதந்திரம்... இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
நாமக்கல் கவிஞர்
வெ.இராமலிங்கம் பிள்ளை
நினைவு தினம்
தேசிய கவிஞர்/காந்திய கவிஞர்/
அரசவை கவிஞர்/காங்கிரஸ் புலவர்/
சமூக சீர்திருத்தவாதி/எழுத்தாளர்/
பத்திரிக்கை ஆசிரியர்/விடுதலை
வீரர்...எனும் பெருமை வாய்ந்த
நாமக்கல். வெ.ராமலிங்கம்
பிள்ளையின் நினைவு தினம்!
.
கத்தியின்றி இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது...தேசபக்தி
பாடலை பாடி/தேசியம்/காந்தியம்
போற்றி/காந்தியக் கவிஞரானவர்!
பாலகங்காதர திலகரின்
தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்!
காந்தியின் கொள்கைகளால்
ஆட்கொள்ளப்பட்டு/ஐக்கியமானவர்!
அறப்போராட்டத்தால் மட்டுமே
விடுதலை பெற முடியுமென்ற
முடிவுக்கு வந்தவர்!
வெங்கட்ராமன் - அம்மணியம்மாள்
தம்பதிக்கு 8 வது மகனாக/
7 பெண் குழந்தைகளுக்குப் பிறகு
ராமேஸ்வரம் சென்று வேண்ட
ராமலிங்கம் என அழைத்து/
நாமக்கல்லில்
19.10.1888 ல் பிறந்தவர்!
தந்தை...மோகனூர் காவல்துறை பணி
தாயார்....பக்தி மிக்கவர்!
பள்ளிபடிப்பு...நாமக்கல்/
கோயம்பத்தூரில்!
1909 ல் திருச்சி பிஷப் ஹெபர்
கல்லூரியில் மேல்படிப்பு!
நாமக்கல் தாசில்தார்
அலுவலகத்தில்
எழுத்தாளர் பணி!
பின்னர் தொடக்கப்பள்ளி
ஆசிரியப்பணி!
நாவன்மை மிக்கவர்!
திருச்சி மாவட்ட காங்கிரஸின்
செயலாளர் பதவி/கரூர்&நாமக்கல்
வட்டார காங்கிரஸ் தலைவர்
பதவிகள் தகுதிகளாயின!
அரசு உத்தரவை மீறி சொற்பொழிவு/
1930 ல் உப்பு சத்தியாகிரக
போராட்டத்தில் கலந்து கொண்டு
ஓராண்டு சிறை கண்டவர்!
தமிழ்நாட்டின் முதல் அரசவைக்
கவிஞர் பதவி!
பத்மபூஷண் பட்டம்!
சாகித்ய அகாடமியில் தமிழ்
பிரதிநிதி பொறுப்பு!
நூலகம் கொண்டு/அவர் வாழ்ந்த
இல்லம் நினைவில்லமாகியது!
அரசு தலைமை செயலக
10 மாடி கட்டிடம் இவர் பெயரிடலானது!
எழுதிய மலைக்கள்ளன் நாவல்
MGR நடித்த திரைப்படமானது!
முத்தமிழ்/ஓவியக்கலை வல்லுநர்!
உப்பு சத்தியாகிரக வழிநடை பாடலாக
பாடி செல்ல இயற்றி கொடுத்த பாடலே
"கத்தியின்றி/இரத்தமின்றி
யுத்தமொன்று வருகுது!
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்!"
மேற்கோள்களானவை....
1)தமிழன் என்றோர் இனமுண்டு!
தனியே அதற்கோர் குணமுண்டு!
2)தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா!
3)கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக் கொள்!
கவலை உனக்கில்லை
ஒத்துக்கொள்!
படைப்புகள்....
3. ... இசை நாவல்கள்
12 .... கட்டுரைகள்
3 ...... தன் வரலாறு
5 ... புதினம்
7 ... இலக்கிய திறனாய்வு
10 ..... கவிதை தொகுப்பு
5 ..... சிறு காப்பியம்
4 ..... மொழி பெயர்ப்பு
போன்ற. 66 நூல்கள் எழுதியுள்ளார்!
மத்திய அரசு...பத்மபூஷண் விருது
மாநில அரசு...அரசவைக் கவிஞராக
சட்டமேலவை உறுப்பினராக!
சேலம் மியூசியத்தில்
அவர் உடைமைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
இவர் வசித்த தட்டாரத்தெரு
கவிஞர் ராமலிங்க தெருவாக
பெயர் சூட்டப்பட்டுள்ளது!
ராஜாஜியின் மனதுக்கு
உகந்த தோழர்!
பாராதியாரால் பாராட்டப்பெற்றவர்!
தேசிய போராட்ட அர்ப்பணிப்பு
கொண்டவர்!
பொய் பேசுவது/பொல்லாதவன்
என பெயரெடுத்தல் கூடாதென
தாயாரால் இதிகாச புராணம்
கூறி வளர்க்கப்பட்டவர்!
1909 ல் மணமானவர்!
ஆங்கில ஆசிரியர் எலியட்
ஓவியம் வரைய கற்றுத் தந்தார்!
தங்கப்பதக்க நிகழ்வுகள்....
1)டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ்
ஓவியம் வரைந்து/அவர் முடிசூட்டு விழாவில்...1912 ல் பரிசளிக்க...
மன்னர் குடும்பம் தங்கப்பதக்கம்
பரிசளித்து மகிழ்ந்தது!
2)1924 ல் காங்கிரஸ் தலைவர்
சீனிவாச ஐயங்கார் நிகழ்த்திய
தேசபக்தி பாடல் போட்டியில்
வென்று/சுதந்திர சங்கு
பத்திரிக்கையில் அப்பாடல்
ஒளிபரப்பாகி/தங்கப்பதக்கம்
பரிசு கிடைக்கப் பெற்றவர்!
அரசியல்....
1906 ல் விடுதலை வேட்கை.
1914 ல் கரூர்/திருச்சி வட்ட
காங்கிரஸ் தலைவராக
1921 - 1930....நாமக்கல் மாவட்ட
காங்கிரஸ் தலைவராக!
கரூர்...அமராவதி நதிக்கரையில்
கூட்டங்கள் நிகழ்த்துவார்!
நகைச்சுவை கலந்து பேசும்
சிறந்த பேச்சாளர்!
1945 ல் இவரை....கல்கி/
காமராஜ்/திரு.வி.க. பாராட்டினார்கள்!.
1949 ல் ...அரசவைக் கவிஞராக
கவர்னர் பவநகர் மகாராஜா
தலைமை தாங்கி பதவி!
1956/1962 ல் தமிழக சட்டசபை
மேலவை உறுப்பினராக பதவி!
1971...பத்மபூஷண் விருது!
காந்தி அஞ்சலி...
தொகுதி வெளியீட்டில்.....
குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தில் பிளக்க வேண்டும்!ரத்தம் வர தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறத்தில் பலர் உதைக்க
அத்தனையும் தான் பொறுத்து
அகிம்சை காத்து/அனைவரையும்
அதே போல் நடக்கச் செய்து
ஒத்து முகமலர்ந்து முகத்தில்
சிரிப்போடும் உயிர் துறந்தால்
அதுவே என் உயர்ந்த ஆசையென
உரைக்கும் காந்தியை எண்ணிப் பார்!
தமிழ்த்தாய் வாழ்த்து...
தமிழன்னை திருப்பணி செய்வோம்!
தரணிக்கே ஓரணி செய்வோம்!
சுதந்திரம்.....
இச்சை கொண்ட நிமிஷமே
நிச்சயம் சுதந்திரம்!
வேண்டும் என்ற உறுதியே
விடுதலைக்கு வழி விடும்!
யாண்டிருந்து வருவது?
யார் கொடுத்து பெறுவது?
அடிமையல்ல நானெனும்
ஆண்மையே சுதந்திரம்!
தடியெடுக்க வேண்டுமோ?
சண்டையிட்டு வருவதோ?
தீமையோடு உதறி விட்ட
திண்மையே சுதந்திரம்!
வாய்மையோடு உறவு அறாத
வன்மையே சுதந்திரம்!
கவிதை நூல்கள்.....
1938...தேச பக்தி பாடல்/பிரார்த்தனை
1942...தமிழன் இதயம்
1951....காந்தி அஞ்சலி/தமிழ் தேன்
1953....சங்கொலி/கவிதாஞ்சலி/
மலர்ந்த பூக்கள்
1960....நாமக்கல் கவிஞர் பாடல்கள்/
அவனும் அவளும்.
புதினங்கள்......
1942....மலைக்கள்ளன்
1966....மாமன் மகள்/தாமரைக்கண்ணி
1962...கற்பகவள்ளி/மரகதவள்ளி/
காதல் திருமணம்
உரைநடை கட்டுரை.....
1956...தமிழ் மொழியும் தமிழ் அரசும்
1965....இசைத்தமிழ்
1953.... கவிஞன் குரல்
1947....ஆரியராவது ?திராவிடராவது?
1948....பார்ப்பன சூழ்ச்சியா?
திருக்குறள் உரை
கம்பன் கவிதை
இத்தகு சிறப்பு வாய்ந்த
நாமக்கல் கவிஞர்
வெ.ராமலிங்கம் பிள்ளையின்
நினைவு தினத்தில்
இதய அஞ்சலி செலுத்துவோம்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728.
Comments
Post a Comment