சிரமங்கள் இல்லா சீர்பெறும் வாழ்க்கை கண்ணன் அருள்வான் - கவிஞர் ச. இலக்குமிபதி.

பாஸ் செய்து விட்டோம்!!



இ பாஸ் எனும் ஒரு தடை நீங்கியது இன்று!!


எத்தனையோ துயரங்களுக்கு இடையில், இந்த ஒரு விடுதலை ஆறுதல் அளிக்கிறது கோவிட்19 கொடுமையில் இருந்து தப்பிக்கும் காலம் எக்காலமோ?


நாம் எக்காளமிடும் காலம் எக்காலமோ? வரும் காலமேனும் நிம்மதியை கொண்டுவருமோ? அச்சுறுத்தும் வைரஸ் ஆபத்து அகிலத்தை விட்டு விலகுமோ?


கால்வயிறு கஞ்சி குடிப் போரும்,வேலைவாய்ப்பு பெற்று, வறுமையில் இருந்து மீளும் காலம் வருமோ?


ஆறு மாதங்களாய் அடி மனசைத் தொட்டு அச்சப்படுத்தி, ரனகலமாக்கிக் கொண்டிருந்த கொரோனா கொடுமை ,நம்மை விட்டு சீக்கிரம் ஓடி ஒழியுமோ?


முத்தான முதல்வர் இன்று கொடுத்திருக்கும் சலுகைகள் ,ஆறுதல் அளிக்கின்ற மருந்தாகி ,கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுக்கிறது!


ஆலயக் கதவுகளை திறக்கின்ற ஆணை அணைத்து ஆன்மீக உள்ளங்களிலும் தேன் வார்க்கின்றது!!



லாக் டவுன் ஆரம்பித்த  மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து, இதோ இந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரம் வரை, சற்றேறக்குறைய 155 நாட்கள் ,தொடர்ந்து ,கொரோனா யுத்தம் என ஆரம்பித்து ,இன்றுவரை பல்வேறு தகவல்களை உள்ளடக்கி பதிவுகளை யாம்  கொடுத்து வந்தோம்!!


தினமும், வேலுர் நண்பனும் நாமும் இணைந்து கொடுத்த பதிவுகளை ப் பாராட்டி ,ஆதரவு கொடுத்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நிறைவாகத் தெரிவித்துக்கொள்கிறோம்!!


இனிவரும் காலங்களில், அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு, நிச்சயம் அமையும் என யாம் நம்புகின்றோம்!!


பல நண்பர்கள், பாரதத்தில் வரும் அக்குரோணி என்பது என்ன? என என்னிடம் கேட்பது உண்டு!மகாபாரதத்தில் பருவங்கள் 18!


கீதையின் அத்தியாயங்கள் 18! குருசேத்திரப் போர் நடந்த நாட்கள் 18!


போரில் பங்கெடுத்துக் கொண்ட அக்குரோணி களின் எண்ணிக்கை 18! பாண்டவர் சார்பாக ஏழு அக்ரோனி! கௌரவர் சார்பாக 11 அக்குரோணி!   


ஒரு அக்ரோனி என்பது 21870 தேர்களும் 21870 யானைகளும் 65610 குதிரைகளும் 109350 கால் ஆட்களும் கொண்ட படையாகும்!!



இதை எப்படிக்கூட்டிப் பார்த்தாலும் வரும் எண்ணிக்கை 18! பகவத் கீதையின் பதினெட்டாவது அத்தியாயம் மோட்ச சந்நியாச யோகம்!


18 ஆவது அத்தியாயத்தின் 66 ஆவது சரம் ஸ்லோகம் மிக மிக முக்கியமானது!மாசுசஹ !என்னை சரணடை !முற்றிலும் சரணடைந்து விடு !


அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்பதுதான் அதனுடைய சாரம் !! பகவத் கீதையின் 18 அத்தியாயங்களும் ,பரமபதத்தை அடைய ,அந்த பரந்தாமனே நமக்கு கொடுத்திருக்கும் 18 வெற்றிப்படிகட்டுகள்!!


700 ஸ்லோகங்களில் ஆன பகவத் கீதை நமக்கு வாழ்வியல் பாடமும் ஆகும்!!


அர்ஜுனன் இடத்தில் எந்தவித மாற்றமும் காணப்படாத போது பகவான் முடிவாக கூறுகின்றார்! உனக்கென்று விதிக்கப்பட்ட கர்மங்கள் அனைத்தையும் தவறாமல் மனப்பூர்வமாக செய்துவிடு !



கர்ம பலன்கள் அனைத்தையும் என்னிடத்தில் அர்ப்பணித்துவிடு! பரமேஸ்வரனான என்னை தஞ்சம் அடைந்து விடு! உன்னை நான் அனைத்துப் பாவங்களில் இருந்து விடுவிப்பேன்!


என்கிறார் புருஷோத்தமன்!!இதுவரை குருச்சேத்திர களத்தில், நானும் நீயும் நடத்திய மொழியை ,எவன் படித்தாலும் என் சொல் கேட்ட தாய் ,என்னை வணங்கியதாகவே நான் எண்ணுவேன்!



நம்பிக்கையுடன் நாட்டம் மிகுந்து பகவத் கீதையை எவன் கேட்பானோ அவனது பாவமும் அழிவது உறுதி !


அமர நிலை தான் அவனது இறுதி!! கேட்டதும் கொடுப்பவனான கிருஷ்ணனின் தெய்வீக மொழிகளை கேட்டீர்களா தோழர்களே!!


அதன்படி நடப்போம்!! தன்னை மறந்து என் சந்நிதி கலந்தால் தனஞ்சயா !நீ என் தாள் களை அடைவாய்!! என்கிற கண்ணனின் அமுத மொழிகளை சிர மேற்கொள்வோம்!!



சிரமங்கள் இல்லா சீர்பெறும் வாழ்க்கை கண்ணன் அருள்வான்! கண்ணன் அருகிருக்க இன்னும் கவலைகள் எதற்கு?  இதுவும் கடந்து போகும் !என மாதங்கள் பலவாய் காத்திருந்தோம்!


மனம் மகிழும் அளவுக்கு ஈபாஸ் நடைமுறை  இப்போது அமுலில் இல்ல! இப்படி இனி ஒவ்வொன்றாக கடந்து போகும்! நம் கவலைகள் யாவும் பறந்துபோகும்! கோவிட் காலம் நமது வாழ்வில் ஒரு கற்காலம் !



அதனை மறப்போம்!ஒரு பொற்காலம் படைக்க எழுந்து நிற்போம்! ஏற்றம் காண்போம்!!நன்றி வணக்கம்!! 


- கவிஞர் ச. இலக்குமிபதி.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.