நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
சிவசக்தி லீலை
தந்தை தட்சன் யாகத்திற்குச் செல்ல
பதி நுகல் கேட்க தவறினாள் சக்தி!
தாய் வீடளித்த அலட்சியம்
தக்கடையாக ...தவறுணர்ந்தாள்
சிவனின் இல்லக் கிழத்தி!
தன் பேச்சு ஓர்ப்ப மறந்த மனைவி
மன்னிப்பு கேட்டும் நுகைதல் காண
மறந்தனன் கைலாசநாதன்!
நெட்ட கரும்புல்லென மலைத்தே
கணநேரம் பரமேஸ்வரி நின்றிட
வாழ்வங்கே கேள்விக்குறியோடு
சுளகம் நெல்லிக்கனியுமானது!
குழலியணிந்தவன் தங்கையவள்
சூலமேந்திய கணவனால்
தமியான வேதனை கொண்டாள்!
நல்ல வண்ணம் கொண்ட பிடியலுடன்
நல்வாழ்வுக்கு சூழ்வு காண,
பிழம்பின் அழகு சேர,
எடுத்த கால் எடுப்பினில் ஜதி கூட,
பிரளயம் அதிர ஆடுகிறாள்
யுகத்திற்கே தாயான ஜகதாம்பிகை!
சிவதாண்டவம் அரங்கேற
தட்சனின் செருக்கங்கே
முக்கண்ணன் இரையானது!
நமசிவாய! சிவாயநம!
என ஓதும் கலைச்சொற்களுடன்...
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728.
Comments
Post a Comment