இவர்களிடமெல்லாம்.... நாட்கள் மலர்வது சாத்தியம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
அன்பிற்கும் உண்டோ
அடைக்குந்தாழ்?
அன்பு....
முரண்பாடுகளின் கதவுகளை
யதார்த்தமாக திறக்கும்.....
புத்துணர்வூட்ட உடலுள்
குருதியாக ஓடும்.....
அன்பெனும் பிடியுள் அகப்படும்
மலையென வள்ளாலாரிடம்!
அன்புடையோர் என்றும் உரியர்
பிறர்க்கெனும் வள்ளுவனிடம்!
அடியார்க்கு நல்லமுது அளிக்கும்
திலகவதியிடம்!
உணவில்லையேல் ஜகமழிக்கும்
பாரதியிடம்!
கண் பெயர்த்து அப்பிய
திண்ணனிடம்!
பாலம் அமைத்து பத்தினி
கொணர்ந்த இராமனிடம்!
கணவனுக்காக கண் கட்டிய
காந்தாரியிடம்!
அன்பு....
ஆத்திரம்/கோபம்/சண்டைகளை
நீர்க்குமிழியாக்கும்....
கருணை/பொறுமை/இரக்கமுள்ள
உள்ளமாகும்......
பிடி அவலுண்டு குசேலனுக்கு மாட
மாளிகை தந்த கிருஷ்ணனிடம்!
பக்தியால் திதி மாற்றிய பட்டருக்கு
உதவிய அபிராமியிடம்!
காதலை நெஞ்சில் நிறுத்தி காத்து
இருந்த ஊர்மிளையிடம்!
செஞ்சோற்று கடனுக்காக உறவுகள்
மறுத்த கர்ணனிடம்!
அன்பு.....
அறிந்தே வருத்தினாலும் மன்னிக்கும்!
தெரிந்தே குழிபறித்தாலும் கை
கோர்க்கும்!
அனாதையான குழந்தை/பெற்றோரை
நேசிக்கும் இல்லங்களில்!
ஈகை இசைபட வாழ்ந்த கடையேழு
வள்ளல்களிடம்!
உடல்/உயிர் தந்து தேசப்பற்று
காட்டிய தியாகிகளிடம்!
மாடு மேய்ப்பவன் கையில் நூல்
தந்த காமராசரிடம்!
கன்றுக்கிரங்கி தேர்க்காலுக்கு மகன்
தந்த மனுநீதியிடம்!
இறைவன்பால் சித்தம் நுழைத்த
நாயன்மார்/ஆழ்வார்களிடம்!
பல்லுயிர் ஓம்புதலில் தெரசாவிடம்!
இவர்களிடமெல்லாம்....
நாட்கள் மலர்வது சாத்தியம்!
அன்புடன் மலர்வதே சத்தியம்!
வான் பொய்க்கா நிஜம்
போலும் அன்பு......
அடைக்கும் தாழ் காண
வெகுண்டெழுதல் நிச்சயமே!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
,அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739725.
Comments
Post a Comment