யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு உறவாடி -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
அண்ணா இலக்கு
யுகம் யுகமாய் தேயாத சொற்கட்டு
உறவாடி,
வேர் விட்டு பரந்த தமிழின உணர்வு
கிளறி,
திக்கெங்கும் இனவிடுதலை உணர்வு
எழச்செய்து,
தேர்தல் வெற்றியாக அறுவடை
செய்தவர்!
தேர்தல் அரசியலை இலக்காக்கி,
அடைய முடியாதென்ற திராவிட தேசிய
வானத்தை,
சாமானியன் தொடும் இலட்சியப்பாதை
ஆக வகுத்தவர்!
தேசத்தின் திட்டங்களை டெல்டா
பிரதேசங்களாக்கி,
கடமை/கண்ணியம்/கட்டுப்பாடு ஜீவநீர்
நயாகராவானவர்!
1953 ன் இராமநாதபுர தேர்தலில்
திராவிட தனி அரசுக்கு வித்தூன்றி,
1956 ல் கூட்டுமுறை ஒத்து வராதென,
ஓட்டுமுறையில் ஒரு லட்சம் வாக்கோடு,
திராவிட நாடு பெறும் வழி உணர்த்திய
சாணக்கியர்!
அண்ணா!
தனி திராவிடம் கோரிய மாநில
சுயாட்சியின் முதல் சுவாசம்!
இருமொழி கல்வி திட்டம் தந்த
தாய்பூமியின் 2ஆம் வானம்!
ஆகஸ்டு 15 ஐ துன்ப நாளென்ற
பெரியாருக்கு
ஆகஸ்டு 15 இன்பநாளென சமுதாயநீதி
உரைத்த 3ஆம் கண்ணானவர்!
அழகுதமிழ் பேச்சு சிந்தனையில்
நான்காம் பரிமாணம்!
சுயமரியாதை திருமணம் சட்டம் நல்கிய
ஜனநாயகத்தின் 5ஆம் தூண்!
22மொழிகளை அரசியலுடைமை
செய்தலில் ஆறாம் அறிவு!
டெல்லி வல்லாட்சிக்கெதிரான பிரச்சார
பீரங்கியான ஏழாம் பொருத்தம்!
உடன்பிறப்புகளின் பாசத்தில்
"அண்ணா"வான எட்டாம் அதிசயம்!
மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடென
அறிவித்த நவரத்தினம்!
தேர்தல் அரசியலை தன் இலக்காக்கி,
1957ல் 15 இடம்/1926ல் 50 இடம்/
1963 ல் 138 இடம் வென்று தமிழினம்
காத்து நின்ற கல்கி அவதாரம்!
தேர்தல் அரசியலை இலக்கென
கொண்ட அண்ணா நாமம் வாழியவே!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513
9940739728
Comments
Post a Comment