ராமாயணத்தை பக்தர்களுக்கு பல்லாண்டுகளாக திருமலையில் சொல்லிக் கொடுத்து வந்த ஞானாசிரியர் இவர் -கவிஞர் ச.இலக்குமிபதி.
வையம் போற்றும் வைணவத்தில், பன்னிரு ஆழ்வார்கள் எல்லோருக்கும் தெரியும்!
ஆச்சாரிய பெருமக்களில் எல்லோருக்கும் தெரிந்தவர் விசிஷ்டாத்வைதம் தந்த ஸ்ரீ பெரும்புதூர் உலகிற்கு தந்த, உடையவர் என்னும் உத்தமரான ஸ்ரீ ராமானுஜர்!!
ஒருமுறை ,ஸ்ரீ எதிராஜ ஸ்ரீ ராமானுஜர், மலையப்பர் தரிசனத்திற்காக, திருமலைக்கு விஜயம் செய்கிறார்!
அவரை வரவேற்க திருப்பதி அடியார் பெருமக்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்!!
திருப்பதியில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த பெரிய திருமலை நம்பி திருமலையின் நுழைவாயிலில் இருந்து அவரை வரவேற்க அங்கே காத்துக் கொண்டிருந்தார்!!
ஸ்ரீ ராமானுஜரின் தாய்மாமன் அவர்! வயதில் மூத்தவர் ஆனாலும் இளையவரான ஸ்ரீ ராமானுஜரை வரவேற்று அழைத்துப்போக ஊர் எல் லையில் நின்று கொண்டிருக்கிறார்!
திருப்பரியட்டபாறை என்கிற இடத்திலிருக்கிறார்கள் எல்லோருமாக! அதோ சாமிகள் வந்து விட்டார்கள்!
என்கிற கோஷம் எங்கும் கேட்கிறது !கையில் தண்டம் தாங்கி ,மேனியில் காவியுடை அணிந்து, மனிதநேயம் வெளிப்படுகிற திருமுகம் மண்டலத்தோடு ஸ்ரீ ராமானுஜர் பெரிய திருமலை நம்பிகள் முன் வந்து நிற்கிறார்!!
அறிவிலும் ஞானத்திலும் வயதிலும் மூத்தவரான தாங்கள், வயதில் இளையவனான, தங்களைவிட ஞானத்திலும் அறிவிலும் எளியோனாகிய என்னை வரவேற்க நேரில் வர வேண்டுமா?
யாரையாவது வயதில் என்னைப் போன்ற சிறியவர் யாரையேனும் அனுப்பி இருக்கக் கூடாதா என்று மனம் உருகி தன் தாய்மாமன் இடத்திலேயே கேட்கிறார் ஸ்ரீராமானுஜர்!
பல நூற்றுக்கணக்கான அடியார் பெருமக்களை தன்னோடு வைத்திருக்கின்ற,வைணவ சம்பிரதாயங்களில் நெடுங்காலம் ஆழங்கால் பட்ட+±++++++++++++!!
++++++;;;;;;++++++++++++++++++++++++++++++++
++++++++((((((((())))))))))))))//)))//////////////////##₹₹ +++((((!!!!((((((((((!!+++++++++++++++++;; சான்றோராகியபெரிய திருமலை நம்பிகள் சற்றும் யோசிக்காமல் ஸ்ரீராமானுஜர் இடத்திலேயே பதில் அளிக்கின்றார்!!
திருமலையில் பல ஆண்டுகளாக திருத்தொண்டு செய்து வரும் பெரிய திருமலை நம்பிகள் மிகப் பணிவோடு ஸ்ரீராமானுஜர் இடத்தில் ஃதிருமலை முழுக்க தேடினாலும் என்னை விட சிறியவன் யாரும் கிடைக்கமாட்டார்கள்!
எல்லோரையும் விட நானே சிறியவன் !அதனாலேயே தங்களை வரவேற்க வந்தேன் வந்தேன் ஃஃ என்று பெரிய திருமலை நம்பிகள் பணிவோடு விடை பகர்கின்றார்!!
இரண்டு மிகப்பெரிய வைணவ சான்றோர்களின் பண்பாடு உலகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது!! பணிவின் உச்சம் அல்லவா அது? இப்போது குறை குடங்கள் எல்லாம் எப்படி குதிக்கின்றன இப்போது?
என்னை விட சிறியவர் யாரும் இல்லை!! சொன்னவர் யார் என்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள்!!
வயதில் மிகப் பெரியவர் !ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய வைணவ தலைவரான ஆளவந்தாரின் சீடர்இவர்! திருமலையில் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வருகிற பாக்கியத்தைப் பெற்றவர்!!
ராமாயணத்தை பக்தர்களுக்கு பல்லாண்டுகளாக திருமலையில் சொல்லிக் கொடுத்து வந்த ஞானாசிரியர் இவர்!
தன்னை சிறியவன் என்று தன்னை விட வயதில் மட்டுமே இளையவரான ஸ்ரீராமானுஜர் இடத்தில் சொல்லுகின்ற அளவிற்கு அவர் மனம் தூய்மை பட்டிருந்தது! ஸ்ரீ ராமானுஜரோ உலகத்திற்கே வழி காட்டி வந்த வைணவ வழிகாட்டி!
அவர் சொல்லுகிறார் என்னை வரவேற்க இவ்வளவு பேர் அதுவும் வயதில் பெரியவரான நீங்கள் எல்லாம் வர வேண்டுமா என்று கேட்கிற மனத் தெளிவு இருந்தது!
குறிப்பாக,இப்போது பெரியவர்களை மதிக்கும் பண்பாடு மிகவும் குறைந்து வருகிறது!
இக்கால இளைஞர்கள் நிணைத்தால் இந்த பதிவினை படித்து பக்குவப்படலாம்!
-கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment