வைணவத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே தாசரதி யைத் தெரியும் -கவிஞர் ச.இலக்குமிபதி.
உங்களுக்கு தாசரதியைத் தெரியுமா?
வைணவத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே தாசரதி யைத் தெரியும்!! தசரத ராஜாவின் திருக்குமரன் ஸ்ரீராமனை தாசரதிஎன வணங்குவார்கள்!
ராமபிரான் அவதரித்த அதே புனர்பூசம் நட்சத்திரத்தில் ,பூந்தமல்லிக்கு அருகிலுள்ள நசரத்பேட்டை யில் ,1027 ஆம் ஆண்டு ,சித்திரை மாதம் ,புனர்பூச நட்சத்திரத்தில் ,ஆனந்ததீட்சிதருக்கும்ஸ்ரீ ராமானுஜரின் தங்கையான நாச்சியார் அம்மாளுக்கும் ,மகனாக பிறந்தவர் பெயரும் தாசரதி!
ஸ்ரீ ராமானுஜரின் பிரதமர் சிஷ்யராக மாறி ,அவருக்குப் பின்னால், சிஷ்யர்களுக்கு முதல்வராக இருந்து வழி நடத்தியதால், எல்லோராலும் முதலியாண்டான் என அழைக்கப் பெற்றவரின் இயற் பெயர்தான் அது!!
வைணவம் என்ற உடன் ஸ்ரீராமானுஜரின் திருநாமம்தான் முதன் முதலில் நினைவுக்கு வரும்!
அதேபோல் ஸ்ரீராமானுஜர் என்றவுடன் முதலியாண்டான் திருப் பெயரே முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வரும்!!
அந்த அளவிற்கு ஆச்சாரியாரின் மனதை கவர்ந்தவர் இவர் துறவு மேற்கொண்ட போது எல்லாவற்றையும் துறந்த என்னால் முதலியாண்டானை துறக்க முடியவில்லையே என பெருமைப்பட்ட ராமனுஜரால் சொல்லப்பட்டவர்!
ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது அவருக்கு பிரதம சிஷ்யர்களான முதலியாண்டான் , கூரத்தாழ்வான் இருவரும் கூடவே உடன் புறப்பட்டு சென்றவர்கள்!
திருக்கோட்டியூரில் பாடம் கேட்கச் சென்ற ஸ்ரீ ராமானுஜர், அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியிடம் ,தனக்கு திரி தண்டம் முதலியாண்டான்!
பவித்திரம் கூரத்தாழ்வான் என்று தெரிவித்தார் என்பதிலிருந்து முதலியாண்டானுடைய பெருமையை நாம் அறிந்து கொள்ளலாம்!திரி தண்டம் என்பது முக்கோல் !
வைணவ ஆச்சாரியர்களை விட்டுப் பிரியாது உடன் இருக்கும்! முதலிஆண்டான் பெருமைக்கு மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு என ஸ்ரீ ராமனுஜ ஆச்சாரியாருக்கு குருவான பெரிய நம்பி வீட்டிற்கு இவர் பணியாளாக சென்றதை சொல்லலாம்!
பெரிய நம்பியின் உடைய மகள் அத்துழாய் என்பவர்க்கு திருமணம் ஆனது! அக்கால முறைப்படி தன் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் போது கூடவே ஒரு பணியாளரை அனுப்புவது பெண் வீட்டார் வழக்கமாய் இருந்தது !
பெரிய நம்பிக்கு வேதனை தனக்கு வசதி இல்லை என்பதால் ஒரு பணியாளரை அனுப்ப முடியாமல் தவித்தார்!
அவரது மகள் அத்துழாய் எப்போதும் ஸ்ரீ ராமானுஜரை அண்ணன் முறையாகவே கருதி அவரிடத்தில் கோரிக்கைகளை வைப்பதுண்டு!
அதை நினைவில் வைத்துக்கொண்டு ஸ்ரீ ராமானுஜரை கேட்டபோது அவர் உடனடியாக முதலியாண்டான் அத்துழாய் வீட்டிற்கு ஒரு பணியாளராக அனுப்பி வைத்தார் !
மறு பேச்சுக்கு இடமின்றி, மிகப் பணிவுடன் அவ் ஆணையை சிரமேற்கொண்டு ,அத்துழாய் வீட்டிற்கு பணியாளராக சென்ற அதிசய சிஷ்யர் தான் முதலியாண்டான்!!
தனது திருவடி வந்து சேர்ந்தோர்க்கு வைணவ சமயத்தின் மையக்கருத்தாக மனித நேயத்தை உபதேசித்த பெருமை ராமானுஜரையே சேரும்!!அதற்கு மிகச்சரியான உதாரணம் மனிதநேயத்தின் உச்சமாக முதலியாண்டானது இச்செய்கை அமைந்திருக்கிறது!
ஸ்ரீ ராமானுஜரின் திருதண்டம் எதிராஜ பாதுகா ஆண்டாண் ஸ்ரீ வைணவ தாசன் சுவாமி முதலியாண்டான் திரு மரு மார்பன் எதிராஸர் பொன்னடி எனப் புகழ்பட அழைக்கப்பட்டவர் தான் முதலி ஆண்டான்!!
ஸ்ரீரங்கத்தில் திருநாடு அடைந்தவரை அவரது குருவோடு வே சேர்த்து எண்ணப்ப்படுகிற அந்தஸ்தை பெற்றவரை நாமும் நம் நெஞ்சில் வைப்போம்!!!
புரந்தரதாசர் தன் மகனுக்கு தாசரதி என்றே பெயர் வைத்திருந்ததையும் நிணைவில் கொள்வோம்!!
-கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment