கண் முன்னே தோன்றினாள் - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
கலைச் சொற்களில் பெண்
கண் முன்னே தோன்றினாள்
என் நிஜமான கிழத்தி!
அண்ணாந்து தான் பார்க்கணும்
கரும்புல் உயரம் என் தேவதை!
நான் துயர் படும் போது
அவள் நுவல் எனக்கு மந்திரம்!
இருப்போர்க்கும் இல்லாதவர்க்கும்
தக்கடைப் போல நியாயம் தான்!
கூட்டம் தான் எங்கும் கூடும்
அவளின் கருத்து ஓர்ப்ப!
பார்த்துக் கொண்டே இருக்கலாம்
பிழம்பு....அழகோ அழகு
பார்க்க பார்க்க சலிக்காது!
குழலியின் மகிமை போல்
பூஜைக்கு உகந்தவள்...
கடவுளின் அம்சம் தான்!
வண்ணம் கொண்ட பிடியலவள்
அவளுக்கு நிகர் அவளே!
பெரும் கும்பலின் மத்தியில்
அவளோ என்றுமே தமி!
சுற்றத்தார் அனைவரின்
நல்வாழ்விற்கு சூழ்வு செய்வாள்!
இதுவரை எங்கும் நுகைதல்
அவளிடத்தில் கண்டதில்லை...இனி
காணப் போவதும் இல்லை!
இப்படைப்புகளை கொண்ட இவளை
சுளகத்தில் வைத்து கொண்டாடுவேன்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.
Comments
Post a Comment