நிச்சயம் இந்தப் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை -கவிஞர் ச.இலக்குமிபதி.
கணபுரத்தாள்!
நிச்சயம் இந்தப் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை!!
வைணவத்தில் ஆழங்கால் பட்ட வர்க்கு, கணபுரத்தாள். எனும் பெயர் மிகவும் பரிச்சயமான ஓன்றாகும்!!
வைணவ ஆச்சாரியர் பெருமக்களில் நம்பிள்ளை என்னும் பெரியார் ஆச்சாரியர்களின் மிகச் சிறந்தவராக விளங்கியவர்! நம்பூர்வரதர் என்பது அவரது இயற்பெயர் ஆகும்!
அவருக்கு நஞ்சீயர் குருவாக இருந்தார் என்பது வரலாறு!!
ஒருமுறை நம்பிள்ளை காவிரிக்கரையின் அந்தப்புறம் அதாவது திருவெள்ளரை எனும்திருத்ததலத்தில் தங்கியிருந்து, மாலை, காவிரியின் மறுகரையில் இருக்கும் திருவரங்கத்திற்கு வர விரும்பி காவிரிக்கரையோரம் வந்து நின்றார்!
கூடவே நிறைய அடியார் கூட்டம்!ஓடக்காரன் ஆச்சாரியா பெருமகனார் ஏற்றிச்செல்ல ஆழமாய் வந்து நின்றான் எல்லோரும் ஓடத்தில் ஏறிச் செல்ல ஓடம் நகர்ந்தது!
காவிரியில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது! ஓடக்காரன் நிலைகுலைந்து போனான்! சரியான இருட்டு !
பேய் காற்று !பெருவெள்ளம்!!தடுமாறியது ஓடம் ! ஓடக்காரனோ ஓடத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து ,ஆச்சாரியாரை நாம் காப்பாற்றவேண்டும் என்றால், நம் பிள்ளை நமக்கு வேண்டும் என்றால், நாளைக்கு வைணவம் தழைக்க நம் ஓடத்தில் பயணம் செய்யும் அந்தப் பெருமகனார் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், ஓடத்தில் இருந்து ஒருவர் காவிரி நதியில் குதித்தால் மட்டுமே காப்பாற்ற முடியும்!
ஓடத்தை நிலைகுலையாமல் கொண்டு செல்ல முடியும் என்றான்!! யார் தான் முன் வருவார்கள்?
காவிரி நீர் சுழலில் சிக்கிக் கொள்ள யாருக்குத்தான் மனம் வரும்! திடீரென்று ஓடத்தில் பயணம் செய்துகொண்டிருந்த, ஒரு பெண்வ?
வைணவ அடியார், ஆச்சாரி யாரை காப்பாற்ற அடியவரான நான் ஆற்றில் குதிப்பேன்என்று சொல்லியபடி தொப்பென்று குதித்து விட்டாள்!!ஓடம் ஆற்றில் எதிர்கரை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது!
ஆச்சாரியாரின் கிருபையினால் அரங்கனின் அருளினால் அந்த ஓடம் பத்திரமாக கரை சேர்ந்தது!
அனைவரும் ஓடத்தில் இருந்து பத்திரமாக கரையில் இறங்கிக் கொண்டார்கள் !!
அப்புறம் நடந்ததுதான் ஆச்சரியம்!ஐயா! நான் பத்திரமாக இங்கே ஒரு மணல்மேட்டில் ஒதுங்கி ,அதன் அருகிலிருக்கும் கோரைப் புற்க்களைபிடித்துக் கொண்டு, வெள்ளத்தால். அடித்துப் போகாமல் நின்று கொண்டிருக்கிறேன்!!
என பல முறை பெருங்குரலால் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்!
அந்தப் பெண்ணிடம்இருந்து சப்தம் வந்த திசை நோக்கி ஓடத்தை செலுத்தி அந்த பெண்ணை அழைத்து வர ஆச்சாரியார்ஆன நம் பிள்ளை ஓடக்காரனிடம் கேட்டுக் கொண்டார்!!
அப்படியே செய்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தான் ஓடக்காரன்!
அந்தப் பெண்தான் கணபுரத்தாள்! உயர்ந்தோரைக் காப்பாற்ற உயிர் விடும் தியாக உள்ளம் வைணவ நெறிக்கு பெருமை சேர்க்கும் செந்நெறியாக திகழ்கிறது!!குலம்தரும் !செல்வம் தந்திடும்!
அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந் தரஞ் செய்யும்! நீள் விசும்பு அருளும் அருளோடு பெருநிலம் அளிக்கும்!
எது தெரியுமா என்று கேட்கிறார் திருமங்கையாழ்வார்! நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்!! அந்த நாமாவை சொல்லுங்கள் விடாமல்!!
வெல்லுங்கள் வாழ்வை விசனப்படாமல்!!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment