உடையவர் என போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜருக்கு இரண்டு அடியார்கள் -கவிஞர் ச.இலக்குமிபதி.
கண்ணுக்கு குடைபிடித்த ஒருவர்!
புண்ணிய காவிரியில் ஸ்நானம் முடித்து ,அடியார்கள் புடை சூழ, அரங்கன் ஆலயம் நோக்கி நடந்தார். எதிராஜர்!
எதிராஜரான இராமனுஜருக்கு முன்னே, வீதியில் வலிமை மிக்க ஆஜானுபாகுவான ஓரு பயில்வான் ,, ஒல்லியான மெல்லிய மங்கை ஒருத்திக்கு குடை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தான்!
பட்டப்பகல்! வெய்யில் அதிகம் இல்லை!! மக்கள் இந்த காட்சியை பார்த்தபடி வியந்து கிடந்தனர்!
உடையவர் என போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜருக்கு இரண்டு அடியார்கள் மிக மிக முக்கியம்!
ஒருவர் முதலியாண்டான் !இன்னொருவர் கூரத்தாழ்வார்!!! அருகிலிருந்த முதலியாண்டானைப் பார்த்து,ஆண்டான்!
அதோ போகிறானே ஒரு மல்லன் குடை பிடித்தபடி !அவனை இங்கே அழைத்து வா என ஆணையிட்டார்!
ஆச்சாரியாரிடம் வந்து அந்த மல்லன் வணங்கினான்! ஏனப்பா !இப்படி பட்டப் பகலில் வெயில் அதிகம் இல்லாத நிலையில் குடை பிடித்தபடி அந்தப் பெண்ணுக்கு பின்னால் போகி றாய்? என ஆச்சாரியார் வினவினார்! சுவாமி! என் பெயர் பிள்ளை உறங்கா வில்லி!
அவள் என் மனைவி பொன்னாச்சி! அவளுடைய கண்கள் மிக அழகாக இருக்கும் !
அவளுடைய அழகு கண்கள் வெயில் பட்டு அழகு குலைந்து விடக்கூடாது என நினைத்து குடைபிடித்து செல்கிறேன் சுவாமி!என்று பதில் அளித்தான் மல்லன்!
உன் மனைவிகண்களை விட பேரழகு மிகுந்த கண்களை கட்டினால் அதை பார்க்க வருகிறாயா என்று கேட்டார்?
ஆச்சாரியார் முன்செல்ல , அவரைப் பின்தொடர்ந்து அடியார் பெருமக்களும் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள்! அரங்கன் முன் நின்று ஆச்சாரியார் வேண்டுகின்றார்!
அந்த மல்லனுக்கு இறைவா!உன் திருக்கண்களை தரிசிக்கின்ற சக்தியை கொடு என்று வேண்டி நின்றார்!?
ஒரு நொடி நேரத்திற்குள் பேரானந்தத்தில் திக்கு முக்காடி, இறைவனுடைய அந்த திருமுகத்தில் ஒளிர்ந்த , கண்களை தரிசித்தான் மல்லன்!
மல்லன் என்றால் போராடுவதில் பலசாலியானவன்! ஸ்ரீராமானுஜரின் திருவடிகளில் விழுந்து அவரது பக்தன் ஆனான்!
அன்று முதல் எத்திராஜர் நீராடச் செல்லும் போதும், வரும்போதும் ,பிள்ளை உறங்காவில்லியின் தோள்களில் கை வைத்து செல்லலானார் இராமானுஜர்! ஏன் இது சுவாமி என மற்ற அடியவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள்!
அதற்கு இரண்டு காரணம்! ஒன்று, தான் தாழ்ந்த ஜாதியில் பிறந்ததை பிள்ளை உறங்காவில்லி தாசர் மறக்க முடிகிறது !
இரண்டாவது காரணம் நாம் உயர்ந்த ஜாதியில் பிறந்தோம் என்கிற செருக்கு இல்லாமல் போகிறது!
இப்போது சரியா என் விளக்கம் என ஆச்சாரியா சொல்ல ,அசந்து போனார்கள் அடியவர்கள்!
தாழ்ந்தவர்கள் என்று யாரும் இல்லை அனைவரும் திருக்குலத்தார் என்ற என்று சொன்ன உத்தமர் அல்லவா ஸ்ரீராமானுஜர்!
-கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment