அனைத்துக் கடைகளும் 8 மணி வரை இயங்க அனுமதி...
அனைத்துக் கடைகளும் 8 மணி வரை இயங்க அனுமதி.
அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி.
வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் பிற வாகனங்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் உண்டு.
சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும்.
பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு செப்டம்பர் மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது.
பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களை திறக்க அனுமதி.
விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
- தமிழக அரசு
Comments
Post a Comment