வாணியம்பாடி அருகே பாலாற்றில் மழை நீர் வெள்ளம். பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு...
பொதுமக்கள் மகிழ்ச்சி....
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக காட்டாறு வெள்ளம் ஏற்பட்டு திம்மாம்பேட்டை, அம்பல்லூர், கொடையாஞ்சி ஆகிய பகுதியில் உள்ள பாலாற்றில் மழை நீர் வெள்ளம் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது.
பாலாற்றில் அதிக அளவில் மணல் கொள்ளை காரணமாக ஆங்காங்கே சுமார் 50 அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள நீர் ஒவ்வொரு பள்ளம் நிரம்பி வருவதால் வெள்ளத்தின் வேகம் சற்று குறைவாக காணப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு சரிவர மழை பெய்யாததால் நிலத்தடி ஆயிரம் அடியில் இருந்து சுமார் 1500 அடிக்கு சென்றுள்ளது. குடிநீருக்காக மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் பாலாற்றில் வரும் வெள்ளத்தால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் வெள்ள நீரைகற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....
Comments
Post a Comment