ரூ.24கோடியே 5லட்சம் கடன் வழங்கும் பணிகளை துவக்கிய மாவட்ட ஆட்சியர்...
காட்பாடி காந்திநகரில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்!
ரூ.24கோடியே 5லட்சம் கடன் வழங்கும் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக 15 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்!
இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணா ராஜ், முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடசியஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்!
இந்த வளாகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலுவலகமும், சிறுகடன் மற்றும் தொழில் முனைவோர் கடன் வசதி மையம் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறப்புக் கிளை ஆகியன ஒருங்கே அமைந்துள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அவர்களால் சாலையோர வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்கான தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டது. இதில் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ. 16 கோடியே 2 லட்சமும், சாலை வியபாரிகளுக்கு மொத்தம் ரூ.16 லட்சமும், பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனாக ரூ. 7 கோடியே 89 லட்சம் என மொத்தம் ரூ.24 கோடியே 5 லட்சம் கடன் வழங்கும் பணிகளை துவக்கி வைக்கும் விதமாக 15 பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, இந்தியன் வங்கி துணை மண்டல மேலாளர், விஐடி பொது மேலாளர், முதன்மை மாவட்ட மேலாளர், முதன்மை மேலாளர்கள் மற்றும் அலுவலர்களும், வட்டாட்சியர் பாலமுருகன். காவல் ஆய்வாளர் காண்டிபன் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களும், பயனாளிகளும் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment