தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 99 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து 301 ரூபாயாக உள்ளது. சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 4 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்துள்ளது. ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பாக, மார்ச் 23ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 352 ஆக இருந்த நிலையில் தற்போது 42 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் இந்த ஊரடங்கு நாட்களில் கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து பண்டிகை நாட்களும் நெருங்கி வருவதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment