சிரமங்கள் இல்லா சீர்பெறும் வாழ்க்கை கண்ணன் அருள்வான் - கவிஞர் ச. இலக்குமிபதி.
பாஸ் செய்து விட்டோம்!! இ பாஸ் எனும் ஒரு தடை நீங்கியது இன்று!! எத்தனையோ துயரங்களுக்கு இடையில், இந்த ஒரு விடுதலை ஆறுதல் அளிக்கிறது கோவிட்19 கொடுமையில் இருந்து தப்பிக்கும் காலம் எக்காலமோ? நாம் எக்காளமிடும் காலம் எக்காலமோ? வரும் காலமேனும் நிம்மதியை கொண்டுவருமோ? அச்சுறுத்தும் வைரஸ் ஆபத்து அகிலத்தை விட்டு விலகுமோ? கால்வயிறு கஞ்சி குடிப் போரும்,வேலைவாய்ப்பு பெற்று, வறுமையில் இருந்து மீளும் காலம் வருமோ? ஆறு மாதங்களாய் அடி மனசைத் தொட்டு அச்சப்படுத்தி, ரனகலமாக்கிக் கொண்டிருந்த கொரோனா கொடுமை ,நம்மை விட்டு சீக்கிரம் ஓடி ஒழியுமோ? முத்தான முதல்வர் இன்று கொடுத்திருக்கும் சலுகைகள் ,ஆறுதல் அளிக்கின்ற மருந்தாகி ,கொஞ்சம் மகிழ்ச்சியை கொடுக்கிறது! ஆலயக் கதவுகளை திறக்கின்ற ஆணை அணைத்து ஆன்மீக உள்ளங்களிலும் தேன் வார்க்கின்றது!! லாக் டவுன் ஆரம்பித்த மார்ச் மாத கடைசி வாரத்தில் இருந்து, இதோ இந்த ஆகஸ்ட் மாத கடைசி வாரம் வரை, சற்றேறக்குறைய 155 நாட்கள் ,தொடர்ந்து ,கொரோனா யுத்தம் என ஆரம்பித்து ,இன்றுவரை பல்வேறு தகவல்களை உள்ளடக்கி பதிவுகளை யாம் கொடுத்து வந்தோம்!! தினமும், வேலுர் நண்பனும் நாமும் இணைந்து கொட...