வலிமை இந்தியாவை கொடுப்பது அவர் கனவுங்க-முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
A.P.J.அப்துல் கலாம் நினைவு தினம்
(மெட்டு....கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)
ஒற்றுமையை வளர்த்தார்...மக்கள்
உயர்வு தன்னை மதித்தார்.
திறமைகள் வளர்த்திடவே...நல்ல
அறிவியல் தான் படைத்தார்.
(1)
இளைஞருக்கு பிடித்தவராம்
இந்தியாவை ஆண்டவராம்
ஆக்கம் தரும் அறிவியலை
உயிர் மூச்சாய் படித்தவராம்
உலகெங்கும் வாழும்
தமிழர் வளம் காண
அறிவு விவசாயம்
செய்தவராம் (ஒற்று)
(2)
அமைதி ஒன்றே ஆதாரம்
அன்பு அதன் மூலதனம்
மாணவர்கள் விழித்துக் கொள்ள
வலிமை சொல்லின் ஆதாரம்
அறிவு வழிகாட்டி
அன்பு நெறி நாட்டி
கலாமின் வார்த்தை
வேதவாக்கு! (ஒற்று)
(3)
அக்னி சிறகு நுண்ணறிவாம்
ஆக்கம் அவர் நோக்கமாகும்
தோழமை அவர் அணிகலனாம்
தூங்கா இரவுகள் போர்க்களமாம்
மக்கள் நலம் நாட
மனித குலம் வாழ
உழைத்த மகானை
நினைத்திடுவோம்!(ஒற்று)
மெட்டு..தஞ்சாவூரு மண்ணு எடுத்து
இராமேஸ்வரம் மண்ணில் பிறந்து
தாமிரபரணி தண்ணியக் குடிச்சி
சென்னையிலே பெற்று வந்த ஞானம்!
கலாம் பார்வையிலே
தோல்விகளே காணோம்!
எத்தனையோ சாதனைகள் சொல்லவா
அது அத்தனையும் சிகரமானதல்லவா
எடுத்துச் சொல்லவா?
வள்ளுவரு சொன்ன வார்த்தை
வாழ்க்கை சூத்திரம்!
அதை வாழ்ந்து காட்டி மறைந்தவரு
இவரு மாத்திரம்!
தன்னானே...தன்னானே...
தன்னானானே... (இராமே)
(1)
SLV ராக்கெட் ஒரு சோதனை!
அது அண்டை நாட்டு எதிரிக்குத்
தான் வேதனை!
அப்துல்கலாம் தீர்க்கதரிசி தானுங்க
அவர் அனுபவங்கள்
பாடமாக்க வேணுங்க!
வலிமை இந்தியாவை கொடுப்பது
அவர் கனவுங்க!
தாய்மொழி தமிழாக அமைந்தது
நல் வரமுங்க!
உழைக்கணும் இளைஞர்களும்
கனவு பலிக்கத் தானுங்க!
உணர்ந்து சொன்னாரு
கொஞ்சம் நீங்க கேளுங்க!
வள்ளுவரு சொன்ன வார்த்தை
வாழ்க்கை சூத்திரம்!
அதை வாழ்ந்து காட்டி மறைந்தவரு
இவரு மாத்திரம்!
தன்னானே...தன்னானே....(இராமே)
(2)
மாணவரின் வலிமைக்கு யார்
நிகருங்க...அது
நனவாக அமைவது தான் சிறப்புங்க!
வேளாண் அறிவியலை
விரிவுபடுத்த வேணுங்க!
உணவு தன்னிறைவு
அமைவது நல் செயலுங்க!
பசியே இல்லாத வயிறு
படைக்க வேணுங்க!
அரசு அது தான்னு முடிவு
பண்ண தோணுங்க!
உழைக்கணும் இளைஞர்களும்
விவசாய நிலத்திலே!
உயர்வு கிடைக்குமுன்னு
அவரோட கனவுங்க!
வள்ளுவரு சொன்ன வார்த்தை
வாழ்க்கை சூத்திரம்!
அதை வாழ்ந்து காட்டி மறைந்தவரு
இவரு மாத்திரம்!
தன்னானே...தன்னானே...(இராமே)
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.
Comments
Post a Comment