அள்ளித்தர வரும் அஷ்ட லட்சுமியே...
அலைமகளை வரவேற்போம்!!
பாற்கடலில் அமுதம் கடைந்த போது அவதரித்தவர் அன்னை மகாலட்சுமி!
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன், மகாலட்சுமியை, திருமகளை தன் மனைவியாக்கிக் கொண்டார் அஷ்டலட்சுமிகளும் ஒரே ரூபமாய் அருள்புரிய காத்திருக்கிறார் அன்னை மகாலட்சுமி அவர் எங்கும் இருக்கிறார் சர்வம் விஷ்ணு ஜெகத் மையம் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்பது அழகிய நம்மாழ்வார் பாசுரம் !
மகாலட்சுமி, ஒருபோதும் விட்டுவிலகாமல். உறைகின்ற மார்பை உடையவன் திருமால்!
ஸ்ரீ ஆன திருமகள் உறைவதால் ஸ்ரீநிவாசன் ஸ்ரீயபதிஆகிறான்! வரம் தர காத்திருக்கிறார் வரலட்சுமி !
வரம் தர ,தேடி வரும் லட்சுமியை ,வரவேற்க நாம் தயாராக வேண்டாமா? அதிர்ஷ்ட தேவதை வருகிறபோது கதவுகளை சாத்தி கொண்டிருந்தால், இழப்பு நமக்கு அல்லவா?
அள்ளித்தர வரும் அஷ்ட லட்சுமியே!
அதிர்ஷ்ட லட்சுமியே! எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக! இன்னல்கள் யாவும் துடைத்து எறிய ,எங்கள் எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக!
கல்யாண யோகமும் மாங்கல்ய பலமும் அருள, எங்கள் இல்லங்கள் தோறும் வருக வருக!! அம்மா !
லட்சுமியின் அருளும் இல்லாமல் ,உன் பதியின் அருளும் இல்லாமல் ,பரிதவிக்கும் உன் குழந்தை லட்சுமிபதி கோரிக்கை இது அம்மா!!
லாக்டவுன் காலத்தில் ,வரலட்சுமி விரத பூஜை செய்யவும் இயலாமல் தவித்து கொண்டிருக்கும் , எம் மக்கள் எல்லோருக்கும், சகல சம்பத்துக்களையும் அருள எல்லோர் இல்லங்களுக்கும் நீ வர வேண்டும் அம்மா!!
அவர்கள் வேண்டும் வரம் யாவும் கொடுத்து அருள வேண்டும் அம்மா!!
காக்கும் கடவுளோடு ,அம்மா !நீ வரும் வேளை ,எங்களுக்கு பொன் வேளையம்மா!!
- கவிஞர் ச.இலக்குமிபதி.
Comments
Post a Comment