ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் பள்ளியில் உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம்.


வேலூர் மாவட்டம் ஸ்ரீ நாராயணி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில், வேலூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பாக உலக இயற்கை வளங்கள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வரும் வேலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான திரு. சீ முரளீதர் தலைமை தாங்கினார். 


பள்ளி முதல்வர் திருமதி இந்துமதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். துணை முதல்வர் திருமதி ஆற்றலரசி முன்னிலை வகித்தார். 


ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குனர் முனைவர் மீ சுரேஷ்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ‍ உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆதிகாலம் முதலே மனிதன் வாழ்க்கையானது இயற்கையை சார்ந்தே உள்ளது. காடுகளுக்கு நடுவில் இயற்கையான சூழலில் மனிதர்கள் வாழ்ந்த நிலைமாறி தற்போது இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி நகரங்களில் பல்வேறு மக்களுக்கிடையே மனிதர்கள் வாழும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் இயற்கை வளங்கள் மீது மனித சமூகம் நடத்தும் தாக்குதல்கள் தான். கடந்த 200 ஆண்டுகளாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபாடு காலநிலை மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சார்ந்த பிரச்சனைகளை நாம் தற்போது சந்தித்து வருகிறோம். அடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து உலக நாடுகளும் இருப்பதாக எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள் இயற்கை வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர். எதிர்கால சந்ததியினர் இயற்கையான சூழலில் வாழ இயற்கை வளங்களை பாதுகாப்பதை ஒவ்வொரு குடிமகனும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயற்கை நமக்கு எடுத்துக் கூறும் செய்தியாகும். இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்ற நோக்கில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. எனவே நாம் இயற்கை வளங்களை பாதுகாத்து நாமும் அனுபவித்து எதிர்கால சந்ததியினருக்கும் இயற்கை வளங்களை விட்டுவைக்க வேண்டும் என்று பேசினார். பள்ளி வளாகம் முழுவதும் பறவைகளுக்கு உணவளிக்க கூடுகளை மரங்களில் அமைக்கப்பட்டன.


முடிவில் ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் நிர்வாக அலுவலர் திரு ஆதிகேசவன் அவர்கள் நன்றி கூறினார்.


படத்தில்:


ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் முதன்மை முதல்வரும் வேலூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான திரு சீ. முரளீதர் பறவைகளுக்கு உணவை அளிக்கும் கூடுகளை மரங்களில் அமைக்கிறார் உடன் பள்ளி முதல்வர் திருமதி இந்துமதி, துணை முதல்வர் திருமதி ஆற்றலரசி மற்றும் நிர்வாக அலுவலர் ஆதிகேசவன் அவர்கள்.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.