வாழ்க்கை முழுவதும் ,நந்தவனத்தில்....

நண்பா! நண்பா!



நல்ல நட்பு இருந்தால் ,வாழ்க்கை முழுவதும் ,நந்தவனத்தில் இருப்பது போல் மகிழ்ந்து மணக்கலாம்!


நன்மைகள் செய்து, நலம் பெற, துணைவரும் நட்புமட்டும் அமைந்து விட்டால் துயரங்களை எளிதாய் கடக்கலாம்!


உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத நட்பு மட்டும் கிடைத்துவிட்டால் நினைப்பது எல்லாம் ஜெயிக்கலாம்!


கவலையில் கைகொடுக்கும் தூயதோர் நட்பு உடன் இருந்துவிட்டால், வான வீதியில் நடந்து வரலாம்!


அன்பை விதைத்து ,அல்லல் புதைத்து,ஆறுதல் தருகிற நட்பு மட்டும் பக்கம் நின்று விட்டால் வெற்றிகளையே வாங்கி வரலாம்!


மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் என்றார் கவிஞர் வாலி!


இருக்கும் நண்பர்கள், இனிமைகள் வளர்க்கும் பணியில் சிறந்தால்,  நம் இதய வலிகள் எங்கோ பறந்துஓடும்!


தட்டிக்கொடுக்கும் நட்பு மட்டும் தொடர்ந்து வந்தால் போதும், தோல்விகளை எட்டி உதைத்து, வெற்றிக் கனிகளை பறித்து உள்ளம் பாடும்!


பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனை போல பாரி கபிலர் போல ,இரும்பொறையை போல நட்பு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது லாபம் இல்லை!


அன்பாய் விசாரித்துஆர்வமாய் ஓடிவந்து, உடன் இருக்கும் உயர் நட்பு இப்போதைக்கு போதும்!


இன்று நட்பு, பல நேரங்களில் காணல் நீராகவே இருக்கிறது!


அலோ என்றோ எப்படி இருக்கிறாய் என்று நலம் விசாரிக்க்கூட  தயக்கம் காட்டுகின்ற நிலைமைதான் காணக்கிடக்கிறது!



ஆபத்து என்றால் உதவி என்றால் ஓடி ஒளிந்து கொள்ளும், மனசாட்சி இல்லாத நட்பு, பல இடங்களில் பரவி கிடக்கிறது! ஒதுங்கிக் கொள்ளும் நட்பு ,நட்பே அல்ல!


ஆதாயம் எதிர்பார்த்து ஆசையுடன் பழகுகின்ற நட்பு ஆபத்தானது!


கூட இருக்கின்ற நல்ல நட்பு எப்போதும் தொடர வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்வோம்!!


இன்று ஜூலை 30ஆம் தேதி உலக நட்பு தினம் கொண்டாடப்படுகிற உற்சாகத் திருநாள்!!


- கவிஞர் ச.இலக்குமிபதி.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.