அன்பென்ற ஒரு எழுதுகோலால் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
அன்பின் வழியது
சைவக்குரவர் நால்வர் சித்தமெல்லாம்
சிவமயமானது வசியமான அன்பு!
இறைவனுக்கு தன் கண்ணை அப்பியது
திண்ணப்பனின் திவ்யமான அன்பு!
மறுபிறப்பிலும் மறவாதமனம் கேட்டது
காரைக்காலம்மை பக்தியான அன்பு!
63 நாயன்மார்கள்/12 ஆழ்வார்கள்
நெக்குருகியது சரணாகதியான அன்பு!
செம்புலப்பெயல் நீரென நெஞ்சமானது
குறுந்தொகை கண்ட காதலான அன்பு!
உலக உயிர்கள் உய்ய மும்மாரி கேட்டது
ஆண்டாளின் பரோபகரமான அன்பு!
தனி மனிதனுக்கு உணவு மறுக்க /ஜகம்
அழிவு பாரதியின் சூளுரையான அன்பு!
வாடிய பயிரைக் கண்டு வாடியது
வள்ளலாரின் வாஞ்சையான அன்பு!
முல்லைக்கு தேர்/ஔவைக்கு கனி
கடையேழுவள்ளலின் ஈகையான அன்பு!
மானிணைவு கலையாமல் தேரோட்டும்
கட்டளை அகநானூறின் விழும அன்பு!
100 புரிதல்/1000 போராட்டங்கள்,
ஒற்றை நம்பிக்கை/பல பேராசையோடு
முகங்கள்/முகவரி தேவைப்படாத,
அருகிலிருக்க உயிரது இயங்கி,
தொலைவு காண என்புதோல் உடலாகி,
இன்பம் மட்டும் கூட்டி/இதய ராகம் மீட்டும்
அன்பென்ற ஒரு எழுதுகோலால்
வாழ்க்கையின் பக்கங்களை
அழகாக்க முனைந்திடுவோம்!
அன்பின் வழி கண்டு
அதன் வழி நடக்கும் உத்வேகத்துடன்....
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513.
9940739728.
Comments
Post a Comment