வீரனை நினைத்துப் பாரடா...நீ - முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.

கார்கில் போர் நினைவு தினம்
(சின்னப்பயலே....பாடல் மெட்டு)


கார்கில் போரை/கார்கில் போரை
நினைத்துப் பாரடா!
கார்கில் போரில் உயிர் தந்த வீரனை
நினைத்துப் பாரடா...நீ
நினைத்துப் பாரடா!      (கார்கில்)
                (1)
மலையில்/மழையில்/குளிரில்/நின்று
போரிட்ட கணங்கள்!
தாய்/தாரத்தை பிரிந்தே சென்று
களம் கண்ட தினங்கள்!


நாளும் நொடியும்
பாடம் தந்த
இராணுவத்தின் பயிற்சி!...அவன்
இரத்தத்தோடு தான் கலந்தே நின்றது
வெற்றி பெறும் உணர்ச்சி!       (கார்கில்)
                     (2)
இந்தியனாக வாழ்ந்திட வேணும்
நினைப்புக் கொண்டானே...அதிலே
உறுதி கண்டானே!
எதிரி பாகிஸ்தானி மோத
பகைமை முறித்தானே!...அவனை
ஓட வைத்தானே!


தாய்நாடு தகைமை காக்க டைகர்
மலையைப் பிடித்தானே!..தேசியக்
கொடியும் நட்டானே!
ஒற்றுமை பலமென்று 
உலகத்துக்கே தான்
சொல்லி சென்றானே!...நமக்கும்
உரைக்கச் சொன்னானே!    (கார்கில்)



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுநிலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.