தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மதுரையில் நடக்கவுள்ள தனுஷ் - அக்‌ஷய்குமாரின் பாலிவுட் பட ஷூட்டிங்



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஏற்கெனவே ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மூன்றாவதாக மீண்டும் ராஞ்சனா பட இயக்குநர் உடன் ‘Atrangi Re’ என்ற படத்தில் இணைந்தார் தனுஷ்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷ் உடன் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


கடந்த ஜனவரி மாதத்தில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அக்டோபர் மாதத்தில் மதுரையில் தொடங்க உள்ளது. பின்னர் தில்லி, மும்பையில் அக்‌ஷய்குமாரை வைத்து ஷூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதம் ரிலீசாக வேண்டிய இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படத்தின் பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ணன் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஜகமே தந்திரத்தின் முதல் பாடல் ரகிட ரகிட ஆகியவை நாளை தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.