Redmi Note 9 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம்.

Redmi வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த Redmi Note 9 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 



உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள Redmi ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அம்சங்களை உள்ளடக்கிய புதிய சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், இந்தாண்டு ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 


இதில் Redmi Note 9 ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. ஆனால், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 9 மாடல் அறிமுகம் செய்யப்படாமல் இருந்து வந்தது. 



இந்நிலையில் கொரோனாவால் துவண்டுள்ள இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் Redmi Note 9 பட்ஜெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் இன்று செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சிகர தோற்றத்துடன் காணப்படும் இந்த ஸ்மார்ட் போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்களையும் முன்புறத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது. 


வகைகள் - விலை:


Redmi Note 9 ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வகைகளாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 


4GP RAM + 64GP மெமரி மாடலின் விலை 11,999 ரூபாய் என்றும், 4GP RAM + 128 GP மெமரி கொண்ட போனின் விலை 13,499 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 6GP RAM + 128 GP மெமரி கொண்ட மாடலின் விலை 14,999 ரூபாய் எனவும் ரெட்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


சிறப்பு அம்சங்கள்:


dual-SIM (Nano), ஆண்ட்ராய்டு 10, திரையின் அளவு 6.53 இன்ச், full HD + (1,080x 2,340) பிக்சல்கள், 
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ G85 SoC, கார்னரிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 




கேமரா: 


செல்ஃபி கேமரா 1: 13 மெகா பிக்சல், பிரைமரி கேமராக்கள் 4. சாம்சங் ஐசேசெல் பிரைட் GM1 சென்சாருடன் கூடிய 48 MP பிரைமரி கேமரா, f/2.2 அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்ட 8 MP செகன்டரி கேமரா, f/2.4 அப்பாச்சர் மக்ரோ லென்ஸ் கொண்ட 2MP கேமரா, f2/4 லென்ஸ் கொண்ட 2MP டெப்த் சென்சார் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. 


மேலும் ரெட்மி நோட் 9 இல் இன்ப்ரா ரெட், பிராக்ஸிமிட்டி சென்சார், அசிலேரோமீட்டர் சென்சார், லைட் சென்சார், விரல் ரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. 


ரெட்மி நோட் 9 1216 லீனியர் ஸ்பீக்கருடன் வருகிறது. மொபைல்போனின் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, மேலும் இத்துடன் டைப் சி 22.5W வேகமான ஜார்ஜ் ஆகும் ஜார்ஜரும் 3.5mm இயர்போனும் கிடைக்கிறது. 


இந்த ரெட்மி 9 பட்ஜெட் ஸ்மார்போன் வரும் 24ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதனை வாடிக்கையாளர்கள் mi.com, அமேசான், Mi ஹோம் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.