கொரோனா பாதித்த பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு...
"கொரோனா பாதித்த பகுதிகளான ஓச்சேரி, ஆயர்பாடி, அத்திப்பட்டு, காவேரிப்பாக்கம், ராளச்சேரி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதிகளான ஓச்சேரி, ஆயர்பாடி, அத்திப்பட்டு, காவேரிப்பாக்கம், ராளச்சேரி ஆகிய பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வைரஸ் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைதொடர்ந்து ஓச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் புதிதாக சிறப்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனையும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நெமிலி தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிச்சம், வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்வேதா, நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment