ராணிப்பேட்டையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு வட்டத் தலைவர் நிலவு குப்புசாமி தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் எல் சி மணி மற்றும் ரமேஷ் வேணு துரை பழனி ஆகியோர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகளை ஒடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு அவசர சட்டங்களை கைவிடவேண்டும் மின்சார திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு மேம்பாடு மற்றும் உறுதி கொடுத்தல் சட்டத்தை திரும்பப் பெறுதல் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் வேளாண் தேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் 40 மடங்கு உயர்த்திய நில அளவை கட்டணத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.... ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
Comments
Post a Comment