வேலூரில் போக்குவரத்து போலீசாருக்கு முகக் கவசம், சானிடைசர்...
வேலூரில் பிரசிடென்சி ரோட்டரி சங்கம் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். போக்குவரத்து ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அ.தி.மு.க. வேலூர்மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு,போலீசாருக்கு முககவசம் மற்றும் சானிடைசரை வழங்கினார்.நிகழ்ச்சியில் பிரசிடென்சி ரோட்டரி தலைவர் சதீஷ், செயலாளர் முருகன் ராஜசேகர்,ரமேஷ்,முன்னாள் தலைவர்கள் வெங்கடேஷ், சண்முகம், வேலு, பிரேம், விஜயகுமார், செல்வம், ராஜேஷ்,மற்றும் டில்லி ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment