புதிய CMC வளாகத்தில் ரூபாய் ஒரு கோடி செலவில் பிராணவாயு உற்பத்தி ஆலை.
இராணிப்பேட்டை கண்ணனிகபுரத்திலுள்ள புதிய CMC வளாகத்தில் ரூபாய் ஒரு கோடி செலவில் பிராணவாயு உற்பத்தி ஆலை ஒன்று துவக்கப்பட்டுள்ளது. விபத்தில் ஈடுபட்டு படுகாயம் அடையும் நோயாளிகளிக்கென்ரே இந்த மருத்துவ வளாகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின் பெயரில் இந்த வளாகத்தின் ஒரு பகுதி கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறந்த வகையில் சிகிச்சை அளிக்க இந்த ஆலையை பொருத்தும் பணி மிக வேகமாக, போர்கால அடிப்படையில் எமது பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய காலகட்டத்திற்கு பிறகும் இந்த ஆலை தொடர்ந்து இந்த வளாகத்தில் அமையவிருக்கும் மருத்துவமனைக்கு பயன்படும்.
நம்மை சுற்றியுள்ள இயற்கை காற்றில் 21 % பிராணவாயு உள்ளது. இதுவே பொதுவாக மனிதனுக்கு போதுமானது. இருப்பினும் சிலருக்கு சுவாச கோளாறு இருந்தால், அதிக அளவில் பிராணவாயு அவசியம் ஏற்படுகிறது. கோவிட் 19 நோயாளிகளின் இரத்தத்தில் போதிய அளவு பிராணவாயு இல்லாததால், அவர்களுக்கு சுவாச பிரச்னை எட்டப்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவேதான் கோவிட் 19 நோயாளிகள் அனுமதிக்கப்படும் எந்த மருத்துவ மையத்திலும், போதுமான அளவு பிராணவாயு வழங்கும் வசதி இருப்பது அத்தியாவசியம் .
வழக்கமாக மருத்துவமனைகளுக்கு பிராணவாயு டான்கர்கள் அல்லது சிலிண்டர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இது அதிக விலை, சுற்றுப்புறசூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடியது மட்டும் அல்லாமல் இத்தகைய காலகட்டங்களில் ஊரடங்கு போன்ற பிரெச்சனைகளால் வேண்டிய நேரத்தில் பெர இயலாத சூழ்நிலைகளும் ஏற்படலாம். பிராணவாயு ஆலை அமைத்திருப்பதன் மூலம் எங்கள் வளாகத்திலேயே ஆக்ஸிஜன் உருவாக்கப்படுகிறது. இந்த ஆலை காற்றில் உள்ள பிராணவாயுவை உரிந்து 95% சுத்தமான நிலையில் ஆக்ஸிஜனை உருவாக்கி வழங்குகிறது. விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி அவர்கள் வழங்கிய நன்கொடையின் பலனாகவே இந்த ஆலை அம்மைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு 1000 - 1300 கன அடி ஆக்ஸிஜன் இந்த ஆலையில் உருவாக்கப்படுகிறது. ஒரு நாளுக்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் நிகரான அளவு பிராணவாயு உருவாக்கப்படுகிறது.
Dr. JV Peter
Director, CMC
Comments
Post a Comment