CMC மருத்துவமனையில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டு.

வேலூர் CMC மருத்துவமனையில் 'நாண் இன்வேசிவ் ரெஸ்பிரேட்டரி சப்போர்ட்' என்ற பிரத்தியேக முறையில் கோவிட் 19ஆல் கடுமையாக  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு.



கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அர்ப்பணிக்கப்பட்ட மையங்களை ஏற்படுத்தி நம் தேசத்தின் இந்த போராட்டத்திற்கு வேலூர் CMC மருத்துவமனை பெருவாரியாக ஆதரவளித்து வருகிறது.


கோவிட் 19 ஆல் அடிப்படையாக நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிந்த ஒன்றாகும். நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தால் வெண்டிலேட்டர் மூலம் பிராணவாயு (ஆக்சிஜென்) வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். இதை செய்யும் போது நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்து, தொண்டை வழியாக ஒரு குழாய் செலுத்தப்படுகிறது. உலகளாவிய ஆராய்ச்சி முடிவுகளின் பிரகாரமாக இத்தகைய சிகிச்சையை பெரும் பெரும்பாலான நோயாளிகள் சரிவர தேறி வருவதில்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சமீபமாக அறியப்பட்ட தகவலின்படி, இத்தகைய நோயாளிகளுக்கு  'நாண் இன்வெசிவ் வென்டிலேஷன்' NIV என்ற முறையின்படியே சிகிச்சை அளிக்கபடலாம் என்று தெரியவந்துள்ளது. தொண்டையில் குழாய் மூலம் பிராணவாயு செலுத்தும் முறைக்கு இந்த வழிமுறை முற்றும் வேறுபட்டது. இதில் அழுத்தமாக முகத்தை கவ்வும் முகக்கவசம் அல்லது ஒரு ஹெல்மெட் மூலம் பிராணவாயு வழங்கப்படும். இந்த வழிமுறையினுடைய மேன்மை என்னவென்றால், நோயாளிக்கு மயக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இந்த கவசத்தை கழற்றி அவ்வப்பொழுது உணவை உட்கொள்ளவதும் மற்றவர்களிடம் பேசுவதும் நோயாளிக்கு சாத்தியமாகிறது. துவக்கத்தில் இந்த வழிமுறையை கையாள்வதின் மூலம் சுகாதார பணியாளர்களுக்கு ஆபத்து இருப்பதாக எண்ணப்பட்டது. ஆனால் போதுமான உடல் கவசங்கள் PPE  அணிவதாலும், அறைக்கு போதுமான காற்று மற்றம் (ஏர் எக்ஸ்சேஞ்) ஏற்படுத்துவதன் மூலம் இந்த அச்சம் நீக்கப்பட்டு, பாதுகாவலான சூழலில் பணியாளர்கள் எந்த அபாயமும் இல்லாமல் காணப்படுகின்றனர்.


இந்த பிரத்தியேக சேவையை அளிப்பதற்கு CMC முற்றிலும் அர்ப்பணிக்கப்பட்ட 14 படுக்கைகள் அடங்கிய தீவிர சிகிச்சை (ஹை டிபெண்டெனசி ) மையத்தை NIV சிகிச்சைக்காகவே உருவாக்கியுள்ளது. பல்மோனரி மற்றும் ரெஸ்பிரேட்டரி மெடிசின் துறையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் 24 மணி நேரமும் இந்த மையத்தில் பணியாற்றிவருகின்றனர். வரும் நாட்களில் கோவிட் 19 நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இதனால் மிகுந்த பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


டாக்டர். JV பீட்டர்
இயக்குனர்


ph:0416-2286103.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.