மரம்....அழகான இயற்கை வளம் - பெ.தமிழ்ச்செல்வி.

உலக இயற்கைவளம் 
பாதுகாப்பு தினம்

பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு 
சங்கம் 1948 ல் துவங்கியது!
உலகத்தில் ஏற்பட்டிருக்கும்
சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண,
அதனால் ஏற்படும் சவால்களை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது!
இயற்கையை பாதுகாக்க...
இயற்கை நம்மை பாதுகாக்கும்
என்ற நோக்கில் 
இத்திகதி கொண்டாட்டம்!


இயற்கை வளங்கள்
சுற்றுச்சூழலிலிருந்து
தருவிக்கப் பட்டவை!
வாழ்விற்கு அத்தியாவசியமானவை!
தேவைக்கு பயன்படக்கூடியவை!
மனிதனுக்குப் பயன்படும்
இயற்கையில் கிடைக்கும் கூறுகள்
இயற்கை வளங்கள் ஆகும்!


உயிருள்ள இயற்கை வளங்கள்

உயிர்க்கோளத்திலிருந்து
வருவிக்கப்படுபவை.....
விலங்குகள்/காடுகள்/காடு
சார்ந்த பொருட்கள் இதில் அடங்கும்!


உயிரற்றவை

நீர்/நிலம்/வளியிலிருந்து
வருவிக்க ப்படுதல்!
புதுப்பிக்கக் கூடியவை....
காற்று/நீர்/சூரிய ஒளி/காட்டு வளம்!
புதுப்பிக்க முடியாதவை....
ஃபாசில் எரிபொருள்/தாது பொருட்கள்!


இயற்கை வளங்கள்.....
நீர்/காற்று/செடிகள்/பூக்கள்
வனவியல்/விவசாயக் காடுகள்
காட்டு உலகம்
விலங்குகள்
தாவரங்களின் வகைகள்
மண் வகைகள்
நீர்/கடல்/ஏரி/ஆறு


இயற்கை வளமுகாமைத்துவம்

நிலங்களை கையாளும் முறை
இதில் அடங்கும்!


இயற்கை வளம் சீரழிவு

சுரங்கங்கள்/மீன் பிடிப்பு/பெட்ரோல்
பயன்பாடு/வேட்டை ஆடுதல்/
இவைகள் அனைத்தும்
இயற்கை வளம் சீரழிக்கும் காரணிகள்!


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி
தியோடர் ரூஸ்வெல்ட்...
முறையில்லா வகையில்
இயற்கை வளம் எடுக்க எதிர்ப்பினை
பகிரங்கமாக தெரிவித்தார்!


இயற்கை வளம் பாதுகாப்பு

ஆற்றல் சேகரிப்பு....
காற்றாலை மூலம் 5MW சக்தி
பெல்ஜியம் கடற்கரை பகுதியில்
தோர்டன் bank ல் பயன்பாடு!


1976 ல் 42 வது சட்டதிருத்தம் படி
இயற்கை சூழலை பாதுகாத்தல்!


சுற்றுச்சூழல் பாதிப்பு

ஐம்பூதம் சுற்றியே சுற்றுச்சூழல்.
நிலத்தில் விதை விதைத்து
செயற்கை உரம் தெளிப்பு/
பிளாஸ்டிக் பயன்பாடு நிலத்தில்
புதைய நிலத்தில் மலட்டுத் தன்மை
ஏற்படுதல்/தொழிற்சாலை கழிவு
மண்ணையும் நீரையும் நஞ்சாக்கல்/
மனிதர்களின் நோய்கள் அதிகரித்தல்!


குடிநீர் மாசடைதல்

நன்னீர் தமிழ்நாட்டில் 3.5%
நாளொன்றுக்கு மனிதனுக்கு
குடிநீர் 5லி. தேவை!
நீர் மாசடைதல் குடல் நோய்/
தோல் நோய் உண்டாக்கும்!


சுவாசிக்கும் காற்று மாசடைதல்

தொழிற்சாலையிலிருந்து
வெளி வரும் Co2....
ஓசோன் படலத்தை ஓட்டையாக்குதல்!
பீடி/சிகரெட் புகை
காற்றில் பரவி
மனிதனுக்கு நோய்களை தரும்.
புது டெல்லியில்....
பழைய வாகனங்களின் டீசல் புகை
சுற்றுச்சூழலை பாதிக்க
அவ்வாகன பயன்பாட்டிற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது!


ஒலி மாசு

வாகன ஒலி/தொழிற்சாலை ஒலி...
மனிதனின் மனஅமைதி
உடல்நலம் பாதிப்பு ஏற்படுத்தும்!
வானவில் நிறங்களில் மாசு
தருவதோடு/மனிதனில்
செவிப்பறை/நரம்பு மண்டலம்
வெகுவாக பாதிக்கிறது!


உயிர்கள் படைக்கப்பட்ட போதே
இயற்கை வளங்களும் சேர்ந்து
படைக்கப்பட்டது 
அறிவியலின் ஆதிக்கமே!
காடு/ஏரி/ஆறு/மலை/மேகம்/
மண்வளம்/மழைத்துளி...யாவும்
இயற்கையின் கொடை!


நவீனம் எனும் பெயரில்
நாகரிக உலகம் படைக்க...
காற்றினை மறைத்து air cooler தேடி,
உணவு மருந்தென்பது மாறி
மருந்தே உணவாகி,
மனிதனின் பிணி தீர்க்கும் இயற்கை
தானே பிணி கொண்டு...
வனங்கள் அழிந்து
நதிகள் வறண்டு
மலைகள் மறைந்து
கடல்நீர் உயர்ந்து...மனிதனின்
வாழ்வாதாரம் கேள்விக்குறியானது!


மரம்....அழகான இயற்கை வளம்!
இலைகளின் அசைவில் சிரிப்பொலி
உதிரும் இலையில் தியாகம்
துளிர்க்கும் இலையில் துடிப்பு
மற்ற இலையோடு உரச காதல்
முறிந்து விழ எரிக்கும் விறகு
கனி கொடுக்கும் அற்புதம்
குடை போல் நிழல் தரும் உணர்வு
பறவைகளுக்கு தஞ்சம் 
தரும் அரவணைப்பு....மரமே கடவுள்!
கெட்டதை உள் வாங்கி
நல்லதை வெளி விடும் அறிவு!
கண்ணுக்கு தெரியாத காற்றை
உணர வைக்கும் அறிவு!
மமரம் அஃறிணை அல்ல..
.உயர்திணை!
அதை உணர்பவனே மனிதன்!
ஒரு மகன் வளர குடும்பம் பயனுறும்!
ஒரு மரம் வளர சந்ததியே பயனுறும்!


சுற்றுச்சூழல் பாதுகாப்பு

1.ஒரு மரமாவது நடுவதை
கடமையெனக் கொள்வோம்!
2. வீடு/சுற்றுப்புறம் தூய்மை
     ஆக வைத்தல்!
3. கழிவு பொருள்/கழிவு நீரை
    முறைப்படி அகற்றுதல்!
4. கழிவுகளை மண்ணுக்கடியில்
     விடும் மறுசுழற்சி முறை கையாளுதல்!
5. பிளாஸ்டிக்/பாலிதீன் 
     பயன்பாடு தவிர்த்தல்!
6.வாகன/தொழிற்சாலை 
    புகை வெளி வருவது குறைத்தல்!
7. காற்று/மண்/நீரை ...நச்சு சேராமல்
    இயற்கையை முதலில் பாதுகாக்க
    வேண்டும்! இயற்கையை
    இயற்கையாக வைத்திருக்க வேண்டும்!



உணவு முறை மாற்றம்
கலாச்சார மாற்றம்...
அரிசி/சோளம்/கம்பு/திணை குறைந்து
பீட்சா/பரோட்டா...உணவாகுதல்...
வனப்பகுதி அழிவாக
சுரண்டல்/நிலையற்ற 
வளர்ச்சி திட்டம் அமைதல்...
இயற்கை வளங்கள் பாதிப்பு தரும்!


மாணவர்களின் பங்கு

1. வீடு கட்டும் போது பின்புறம்
     தோட்டம் அமைத்து/செடி வளர்ப்பு!
2. வீடுகளில் மக்கும்/மக்கா குப்பை
     என பிரித்தல்.
3. சைக்கிள் உபயோகித்தல்.
4. பிளாஸ்டிக் பை பயன்படுத்தாமை.
5. கணினி யில் பேப்பர் பயன்பாடு 
     இரு பக்கமும்.
6. கல்வி நிலையங்களை தூய்மை
     ஆக வைத்திருத்தல்.
7. விழிப்புணர்வு நிகழ்வு நடத்துதல்.
8. மழைநீர் சேகரிப்பு பற்றி சொல்லுதல்.



ஜனாதிபதி மைத்திரி 
பால சிறிசேன கூறியது....
ஒரு நாட்டின் வளங்கள் அழிய
நாடு அழியும்!


அசாம் பகுதியில்
1989 ல்
இளைஞர்கள் ஒன்றிணைந்து
ஆரண்யக் கிளப் ஆரம்பித்து
செயல்படுத்தும் நன்மைகள்...
1.நீர்நிலை மணல் சுரண்டல் 
குறைத்தல்
நீரின் சுவை குறைத்தல்
2.காடுகளை ஆக்ரமித்தல் குறைத்தல்.
3. 80% நீர் கடல்நீரில் கலப்பதை
    தவிர்த்தல்.
4. இயற்கை எய்தும் இயற்கை வளங்கள்
    அழியாமலிருக்க உறுதிமொழியாக..
    மழை நீர் சேமிப்பேன்
    ஏரி/குளம் மாசடைதல் தடுப்பேன்
    நெகிழி பயன்படுத்த மாட்டேன்
    மரம் வளர்தலில் ஆவண செய்வேன்
எனும் உறுதிமொழிகள் எடுத்தல்!


நிலங்களை வளப்படுத்தி,
71% நீர்/வேளாண் 
தொழிலை மேம்படுத்தி,
நீர்நிலைகளை பாதுகாத்து,
காடுகளை அழிக்காமல்,
மலைகளை தகர்க்காமல்,
மண்வளம் சுரண்டாமல்,
கரியமில வாயு அளவு பெருகாமல்,
புவிவெப்பமடைதல் தடுத்து,
இயற்கை வளம் அழியாமல்
புவிதனை காப்போம்
எனும் உறுதியினை
ஜூலை 28 ஆம் திததியில்
உலக இயற்கைவளம் பாதுகாப்பு
தினமதில் உறுதிமொழியாக்குவோம்!



முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513
9940739728.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.