நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி நற்பணி மன்றத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள்
இன்று 37 வது பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி , இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் நற்பணி மன்றத்தின் சார்பாக இரத்தினகிரி கோவில் அருகில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 150 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களும் , 300 பேருக்கு மதிய உணவும், 1500 நபர்களுக்கு முக கவசங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள், குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் / கல்வி உபகரணங்கள் வழங்கும் நலத்திட்ட உதவிகள் இரத்தினகிரி காவல்துறை ஆய்வாளர்கள் உதவியுடன் வேலூர் மாவட்ட தனுஷ் நற்பணி மன்றத்தின் தலைவர். தனசேகர், செயலாளர் விஜயசாரதி, பொருளாளர். ஹரீஷ் ஆகியோரின் முன்னிலையில் இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் தினேஷ் குமார் , வீரா தனுஷ் , அஜய் ஆகியோரின் ஏற்பாட்டில் இராணிப்பேட்டை நகர தலைமை தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்ற உறுப்பினர்களுடன் கேக் வெட்டி இனிப்பு வழங்கி கொரோனா நிவாரணம் வழங்கிய நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)
Comments
Post a Comment