இளம் வயதிலேயே மல்யுத்தம் -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.
தீரன் சின்னமலை நினைவு தினம்
இந்திய போராட்ட வீரர்,
கிழக்கிந்திய கம்பெனியை
எதிர்த்து/ கருப்ப சேர்வையுடன்
இணைந்து போரிட்டவர்,
கொங்கு நாட்டில்
ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்ட,
ரத்தினசாமி கவுண்டர்/
பெரியாத்தாவிற்கு மகனாக
17.04.1756 ல் பிறந்து,
31.07.1805 ல் மண்ணுலகம்
விட்டு மறைந்த
தீரன் சின்னமலையின் நினைவு தினம்!
பிறப்பு ...ஈரோடு மேலப்பாளையத்தில்
இறப்பு...சங்ககிரியில்
அடக்கம்....ஓடாநிலையில்.
ஈரோடு மாவட்டம்
காங்கேயம் வட்டம்
சென்னிமலை அருகில்
மேலப்பாளையம் சிற்றூரில் பிறந்தவர்!
இயற்பெயர் ...தீர்த்தகிரி கவுண்டர்!
பழையகோட்டை பட்டைக்காரர்
மரபு சார்ந்தவர்!
தீர்த்தகிரி சர்க்கரை எனும் பெயரானவர்!
இளம் வயதிலேயே
மல்யுத்தம்/தடி வரிசை/ வில்பயிற்சி/
வாள் பயிற்சி/சிலம்பாட்டம்...போன்ற
போர்ப்பயிற்சியினை
சிவந்தாரையர் பார்வழி வந்தாரிடம்
கற்றுக் கொண்டவர்!
கொங்கு நாட்டு வரிப்பணம்
சங்ககிரி வழியாக
மைசூர் அரசுக்கு செல்வதை அறிந்து,
அப்பணத்தினை கவர்ந்து
ஏழைகளுக்கு விநியோகித்தார்!
வரி தண்டல்காரர்களிடம்...
"சென்னிமலை சிவன்மலைக்கிடையில்
சின்னமலை பறித்தது" ...என
சொல்லச் சொன்னவர்!
அன்றிலிருந்து சின்னமலை
என அழைக்கப்பட்டவர்!
07.12.1782 ல்
ஐதர் அலி மறைவும்
திப்பு சுல்தான் கிழக்கிந்தியர்களை
ஆக்ரோஷமாக எதிர்த்தலும்!
ஆயிரக்கணக்கில் கொங்கு இளைஞர்களை
தீரன் அழைத்துச் சென்று
சீரங்கம்/சித்தேஸ்வரம்/மழவல்லி
போர்களில் திப்புவின்
மாபெரும் வெற்றிக்கு உதவுதல்!
04.05.1799 ல் 4 ஆம் மைசூர் போரில்
திப்பு சுல்தானின் வீரமரணம்!
சின்னமலையில்
அரச்சலூர் அருகே
18.04.1792 ல்
143 பீரங்கி வைத்து இடிக்குமளவு
பலமிக்கதொரு
ஓடாநிலைக் கோட்டை கட்டி
தீரன் தன் வீரர்களுக்கு
பட்டாலிக் காட்டினில் பயிற்சியளித்தார்!
ஆயுதங்கள் தயாரித்தார்!
பிரெஞ்சுக்காரர்கள் துணையோடு
பீரங்கிகள் தயாரித்தார்!
03.06.1800 ல்
இடையறாத போரில்
கோவை கோட்டை தகர்க்கும்
கோவைப் புரட்சியில்
தோல்வி தழுவினார்!
1801 ல்
கர்னல் மாக்ஸ் தலைமையில்
பவானி காவிரிக் கரையில்
ஆங்கிலேயரை எதிர்த்து
வெற்றிக்கொடி நாட்டினார்!
1802 ல்
சிவன்மலை-சென்னிமலைக்கிடையில்
சிலம்பமாடி ஆங்கிலப் படையினை
தவிடு பொடியாக்கினார்!
1803 ல்
அரச்சலூரில்
கர்னல் ஹாரிஸின்
ஆங்கிலேயப் படையினை
கையெறி குண்டு வீசியே
வெற்றி கண்டார்!
1804 ல்
ஓடாநிலைக்கோட்டையை
ஆங்கிலேயப் படை
தகர்க்க வர/தப்பித்து
பழனிமலை தொடரின்
கருமலை சென்றார்!
1805 ல்
வெள்ளையனுக்கு
தீரனின் சமையல்காரன்
விலை போக...
பதுங்கிய வீட்டிற்கு கீழே
பிரிட்டிஷ் படையினர் சுரங்கமமைத்து
சூழ்ச்சியோடு கைது செய்து
ஆடிப்பெருக்கில்
சங்ககிரி கோட்டை கொண்டு சென்று
போலி விசாரணை நடத்தி
31.07.1805 ல்
தம்பிகள்/படைத் தலைவர்
கருப்பசேர்வை அனைவருடன்
தூக்கிலிடப்பட்டார்!
வீரம் என்பதற்கான அசல்
வீரனே தீரன்!
மறைந்திருந்து தாக்கும்
கொரில்லா போர்முறை அறிந்த
ஐதர் அலியின் திவான்!
பிரிட்டிஸ் படையின் வேலப்பன்
ஓலைச் சுருள் மூலம்
செய்திகள் தரும் உகந்த நண்பன்!
புலவர்களை ஆதரித்தல்,
மல்லர்களை பயிற்றுவித்தல்,
கல்வெட்டுகளில் குறிக்கும் அளவு
கோவில்களுக்கு திருப்பணி செய்தல்,
கவுண்டர்/தேவர்/வேட்டுவர்/
நாயக்கர்/நாடார்/வன்னியர்/
தாழ்த்தப்பட்டோர்/இஸ்லாமியர்
என அத்தனை பேரும் தம் படையில்
நல்லிணக்கம் காண
சமூக கூட்டமைப்பு தோற்றுவித்தவர்!
தீரன் சின்னமலையை கௌரவிக்க....
1.சென்னையில் உருவச்சிலை
2.ஓடாமலைக் கோட்டையில்
மணிமண்டபம்.
3.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தீரன் சின்னமலை மாளிகை பெயராக!
4.இந்திய அரசில் தபால் தந்தி தொடர்பு
துறை 31.07.2005 ல் தீரன் சின்னமலை
நினைவு தபால்தலை வெளியிடுதல்!
5.சங்ககிரியில் 2012 ல் தமிழக அரசு
நினைவு மண்டபம் கட்டி/
23.12.2013 ல் திறப்புவிழா நடத்தியது!
6.கிண்டியில் உருவச்சிலையும்
வாழ்க்கை வரலாற்று குறிப்பும்
வெளியிடப்பட்டது!
தொல்லை தரும் எதிரிகளிடமிருந்து
நாட்டைக் காத்திடும் எல்லைச்சாமியாக,
தன்னைப் பற்றி சிந்திக்காமல்
தாய்மண்ணைப் பற்றி சிந்தித்து,
காட்டிலும்/மேட்டிலும்/
கடும் மழை/வெயில்/பனியிலும்
நாட்டின் நலன் காக்கும் குலச்சாமியாக,
துச்சமென்று உயிரை மதித்து
தூக்கு கயிற்றுக்கு தலையினை தந்து,
மூன்று முறை அன்னியனை
புறமுதுகிட்டு ஓடிடச் செய்த
மேல்பாளையக்காரர்
தீரன் சின்னமலையின்
ஜூலை 31 ஆம் தேதியின்
நினைவு தினத்தில் தீரனின்
அஞ்சா நெஞ்ச வீரத்தினையும்,
நாட்டிற்காக உயிர் ஈந்த தியாகத்தையும்
நினைப்போம்!வீரவணக்கம் செலுத்துவோம்! ஜெய் ஹிந்த்!
முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி,
முதுகலை ஆசிரியை,
அ.ம.மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை....632513.
9940739728.
Comments
Post a Comment